செவ்வாய், 26 மே, 2009

பரங்கிப்பேட்டையில் ஒரு ஐ.ஏ.எஸ்

பரங்கிப்பேட்டை மாணவ சமுதாயம் முன்னுதாரணமாக கொள்ள வேண்டிய மாணவர்களை பற்றி எழுதி வருகிறோம்.
நமதூர் திரு ராதா கிருஷ்ணன் - திருமதி மருத்துவர் அங்கயற்கண்ணி இவர்களின் மகனான ஆனந்த் என்பவர் அவர்களில் ஒருவர் என்பதில் நாம் பெருமிதம் கொள்வோம்.
அண்ணா பல்கலைகழகத்தில் B.E. Geo Informatics & B.Tech (I.T) (Dual Degree) இந்த வருடம் முடித்து விட்டு I.A.S. இந்திய ஆட்சிப்பனிகளுக்கான அரசு குடிமைத்தேர்வு 2008 தேர்வினை எழுதினார்.

தரப்பட்டியலில் முந்தி I.R.S. (Indian Revenue Service) இந்திய வருவாய் பணியில் தேர்வு பெற்றுள்ளார்.

அரசு குடிமைத்தேர்வு என்பது (Civil Service Exams) நமது இந்திய அரசின் ஆட்சிப்பணிக்கான உயர் அளவிலான தேர்வாகும். சூழ்திறன் அமையப்பெற்ற மற்றும் மிகுந்த பயிற்சியும், முயற்சியும் உள்ள மாணவர்கள் மட்டுமே இதனை எளிதாக வென்றெடுக்கலாம்.

I.A.S. க்காக முயற்சி செய்து தரப்பட்டியலில் சற்று குறைந்ததால் I.R.S. கிடைத்திருந்தும் ( I.R.S.சே ஒரு சாதனை தான் ) இவர் மீண்டும் I.A.S. க்காக (Reappear) இந்த வருடம் தேர்வு எழுதுகிறார்.
தனது லட்ச்சியத்தில் வெற்றி பெற்று சாதித்த, இனியும் சாதிக்கப்போகும் இவர், I.A.S. ஆக நமது வாழ்த்துக்கள்.

இவரை பற்றி சில குறிப்புக்கள்

* பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு நாட்டின் மிக உயர் தர கல்வி மையமான I.I.T. யில் பயில நுழைவு தேர்வு எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை பற்றி கேட்டால் " that was not a serious attempt " என்று மெலிதாக சிரிக்கிறார்.

* ஆனந்த் அவர்களின் தந்தை ராதா கிருஷ்ணன் அவர்கள் ஒய்வு பெற்ற வங்கி மேலதிகாரி. தற்போது பொது சேவையில் அதிக அக்கறை காட்டி வருகிறார். இவரின் தாயார் நாம் அனைவரும் அறிந்த மருத்துவர் அங்கயற்கன்னி அவர்கள். நமதூரில், மருத்துவர் நூர் முஹம்மது தவிர நடு இரவிலும் மக்களின் அவசர மருத்துவ உதவிக்காக தன்னலம் கருதாது சேவை புரிபவர்.

* இவரின் சகோதரர்கள் இருவர் அஷ்விந்த், அரவிந்த். ஒருவர் M.B.B.S இன்னொருவர் B.D.S. படித்து வருகின்றனர்.

நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்.

5 கருத்துகள்:

  1. சலாம்

    "நலலதொரு குடும்பம் பல்கலை கழகம்"
    பொருத்தமான தலைப்பு.படிக்கவும் பார்கவும் மனதுக்கு குளிர்சியாக உள்ளது.அவர்களை மனபூர்வமாக வாழ்த்துவோம்.

    தாயை போல பிள்ளைகளும் நம் ஊருக்கும் நம் ஊர் மக்களுக்கும் சேவை புரிந்து பேரும் புகழும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்.

    நஜீர் உபைதுல்லாஹ்
    தம்மாம்.

    பதிலளிநீக்கு
  2. நமதூருக்கு பெருமை சேர்க்கும் சகோ.ஆனந்த்-அவர்களை பற்றிய தகவலின் மூலம் அனைவருக்கும் மகிழ்வை தருகிறார் சகோ.ஹமீத்.

    I.A.S தேர்வில் சிறப்பான ரேங்கில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆனந்த்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா27 மே, 2009 அன்று 7:58 AM

    ஸலாம்.

    சகோ.ஆனந்த்- அவர்களே I.A.S தேர்வில் சிறப்பான ரேங்கில் வெற்றி பெற்று நம் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக நம் ஊர் மட்களுக்கும் சிறப்பாக சேவையாற்றிட வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. evarai pola ennum neraya pear namathu ooril vara veendum.

    congrats ananth.......

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...