புதன், 20 மே, 2009

அடிப்படை வசதிகள் இல்லாததால் பொலிவிழந்த புதுச்சத்திரம் வாரச் சந்தை!

புதுச்சத்திரம் வாரச் சந்தையில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் படிப்படியாக பொலிவிழந்து வருகிறது.

பொதுமக்களின் வருகையும் வெகுவாக குறைந்து விட்டது.

பரங்கிப்பேட்டை அடுத்த புதுச்சத்திரம் மெயின்ரோடு பகுதியில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக செவ்வாய் கிழமை தோறும் வாரச் சந்தை நடந்து வருகிறது.

புதுச்சத்திரம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த சிறுபாளையூர், மேட்டுப் பாளையம், தச்சக்காடு, சேந்திரக்கிள்ளை, பெரியப்பட்டு, சாமியார் பேட்டை உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த வாரச் சந்தைக்கு வந்து செல்வது வழக்கம்.

கிராம மக்கள் வீட்டிற்கு தேவையான மளிகை, காய்கறி, பழங்கள், துணிமணிகள், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு அதிகளவில் கூடுவர்.

ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வர்.

நகர பகுதிக்கு பஸ் பிடித்து சென்று கூடுதல் விலை கொடுத்து வாங்குவதை தவிர்க்க வாரச் சந்தையில் பொருட்களை வாங்குவது கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இதனால் வாரச் சந்தைகளில் கூட்டம் அதிகளவில் இருந்து வந்தது.

சமீப காலமாக புதுச்சத்திரம் வாரச் சந்தை நடக்கிறதா என்கிற அளவில் படிப்படியாக சந்தை பொலிவிழந்து வருகிறது.

ஆட்டுச் சந்தை, கோழி விற்பனை முற்றிலுமாக குறைந்துவிட்டது.

காய்கறி, பழங்கள் மட்டும்தான் தற்போது கிடைக்கிறது.

சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை.

அத்துடன் சுகாதார வசதியின்மை, இட வசதியில்லாமல் நெருக்கடி போன்ற பல காரணங்களால் வாரச்சந்தை பொலிவிழந்து விட்டது.

இதே நிலை நீடித்தால் வாரச் சந்தை நடைபெறுமா என்ற சூழ்நிலை உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

இப் பிரச்னையை போக்கி வாரச் சந்தை மீண்டும் பழைய நிலையில் சிறப்பாக இயங்க அப்பகுதி ஊராட்சி மன்றம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...