பயிற்சிகளின் விவரம்:
- ஐந்து மாத கால தையல் மற்றும் எம்பிராய்டரி (மகளிர் மட்டும்)
- நான்கு மாத கால எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள் பழுது நீக்கும் பயிற்சி
- மூன்று மாத கால கட்டிங் மற்றும் டெய்லரிங் (மகளிர் மட்டும்)
- இரண்டு மாத கால ஃபிட்டர், பிளம்பர் மற்றும் பம்ப் மெக்கானிசம் பயிற்சி
- ஒரு மாத கால டிடர்ஜெண்ட் சோப்பு தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.
உதவித்தொகை பயிற்சிகள்:
- ஆறு மாத கால காலணி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பு
- மூன்று மாத கால காலணி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பு
- மோட்டார் வைண்டிங் உள்ளிட்ட பயிற்சிகளும்
- இரண்டு மாத கால நோட்டு புத்தகங்கள் தயாரித்தல்
- குளியல் மற்றும் சலவை சோப்பு தயாரித்தல்
- பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தல்
- மண்பாண்டம் தயாரித்தல்
- ஒரு மாதகால ஸ்பைசஸ் மற்றும் மசாலா தயாரித்தல்
- மோட்டார் வைண்டிங் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படும்.
18 வயதுள்ள குறைந்தபட்சம் 8-வது வகுப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
உதவித் தொகை திட்டத்தில் உள்ள பயிற்சிகளில் சேர்ந்து விடுதிகளில் தங்குபவருக்கு மாதம் ரூ. 800 உதவித் தொகை வழங்கப்படும்.
விண்ணப்பம் மற்றும் விவரக் குறிப்பை ரூ. 25 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
தபாலில் பெற ரூ. 35 மணியார்டர் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்போர் தங்களைப் பற்றிய முழு விவரத்துடன் பெற விரும்பும் பயிற்சியைக் குறிப்பிட்டு தகுதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரூ. 5க்கான தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட கவர் ஆகியவற்றை இணைத்து மே 31 - ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
- டாக்டர் ஜே.சி. குமரப்பா கிராமிய தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனம்,
- காந்தி நிகேதன் ஆசிரமம்,
- டி. கல்லுப்பட்டி - 625 702,
- மதுரை மாவட்டம்.
- தொலைபேசி: 04549 - 272 365.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக