காரைக்குடி அழகப்பா பல்கலை தொலைதூரக் கல்வி மையங்களில் இளங்கலை, முதுகலை, சான்றிதழ், டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது.
அழகப்பா பல்கலை தொலைதூரக்கல்வி மையம் மூலம், 2009-2010ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கவுள்ளது.
இதில், இளங்கலையில் பி.ஏ., - பி.லிட்., - பி.எஸ்சி., - பி.சி.ஏ., முதுகலையில் எம்.பி.ஏ., - எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.எல்.ஐ.எஸ்சி., - முதுகலை சான்றிதழ் படிப்பில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பிசினஸ் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் உட்பட 55 பாடப்பிரிவுகளில், மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது.
இதுதவிர, லேட்டரல் என்ட்ரியில் பி.காம்., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., - பி.எஸ்சி., மற்றும் எம்.சி.ஏ., - எம்.ஏ., பாடத்திற்கான விண்ணப்பங்களும் வினியோகிக்கப்படுகின்றன.
விண்ணப்பக் கட்டணம்:
எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - முதுகலை டிப்ளமா கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியியல், இயற்பியல், விலங்கியல், எம்.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுக்கு 300 ரூபாய், இதர பாடப்பிரிவுக்கு 100 ரூபாய்க்கு "இயக்குனர், தொலைதூரக்கல்வி இயக்ககம், அழகப்பா பல்கலை, காரைக்குடி'' என்ற முகவரிக்கு காரைக்குடியில் செலுத்தும் வகையில் டி.டி., எடுத்து விண்ணப்பம் பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாள்.
இப்பல்கலையில் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு மையம், விண்ணப்பம் பெறுவது குறித்த விவரங்களை www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தொலை தூர கல்வியில்,மகா மட்டமான பல்கலைகழகம் இது.
பதிலளிநீக்குஇலங்கைப் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இக்கல்விமுறை? - கலைமகன் பைரூஸ்
பதிலளிநீக்கு