பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 23 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை வரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த பகுதி என்ற நிலை மாறி தற்போது தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாகவும் உருவெடுத்து வருகிறது.

ஹாஜி எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் தலைமையின் கீழ் செயல்படும் பரங்கிப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் இதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியதாகும்.

வங்க கடலிலிருந்து பிரிந்து நகரின் ஓரத்தில் அழகாக ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளாற்றை படகு குழாமாக ஏற்படுத்தியதும் அதில் ஒன்று.

இந்த படகு குழாம் பகுதிக்கு பரங்கிப்பேட்டை மட்டுமில்லாமல் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட பொது மக்கள் பலரும் நூற்றுக்கணக்கில் தினந்தோறும் வந்து போகும் பொழுது போக்கு தளமாக மாறியுள்ளது.

இந்த படகு குழாம் பகுதியில் ஆற்றின் மத்திய பகுதி வரை மரப்பலகைகள் அமைத்து பாதை போடப்பட்டுள்ளது மக்களுக்கு வசதியாக உள்ளது.

அப்படி அமைந்துள்ள மரப்பலகை பாதையில் சில தினங்களுக்கு முன் ஓட்டை ஏற்பட்டு அங்கு நடந்து செல்லும் மக்கள் எந்நேரத்திலும் தடுக்கி விழ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அப்படி ஆபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பரங்கிப்பேட்டை படகு குழாமிலிருந்து நமது செய்தியாளர்

2 கருத்துரைகள்!:

Abbas சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

ஒரேடியா உடைந்து போனால் நல்லது ....என்று தோணுது ...

பலகை சீரமைப்பு இருக்கட்டும் ...அங்கு பல சீர்கேடுகள் அரங்கேறுவதை எண்ணி பார்த்தல் நலம் என்று நான் கருதுகிறேன்....

அச்சீர்கேடுகள் யாவை.??

அவற்றை இங்கு பட்டியலிட விரும்பல....

அப்பாஸ்

TNTJPNO சொன்னது…

அஸ்லாமு அலைக்கும்,

சகோதரர் அப்பாஸ் கூறுவது பல அணாச்சாரங்கள் அங்கு நடைபெறுகிறது. இதை சட்டம் போட்டு தடுக்க முடியாது? அல்லாஹ்வுடைய (மறுமை) அச்சதை ஏற்படுத்திதான் தடுக்க முடியம். அதற்கு மார்க்க பிரச்சாரங்கள் மூடுக்கிவிட வேண்டும்.
இதை சமுதாய் இயக்கங்கள் செய்ய முன்வர வேண்டும். அல்லாஹ் சிறந்த சமுதயாமக யாரை குறிபிடுக்கிறான்? உங்களிடம் நன்மை ஏவி, தீமை தடுக்கும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இன்ஷாஅல்லாஹ் நம்மையை எவோம்!தீமையை தடுப்போம். என்று பிராத்தனை செய்தவனாக.

அண்புடன்,
அப்துல் ரஹ்மான்,
பரங்கிப்பேட்டை.

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234