பரங்கிப்பேட்டை:
பரங்கிப்பேட்டை- பு.முட்லூர் சாலையில் 13 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் மற்றும் சாலை சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
பரங்கிப்பேட்டையில் இருந்து பு.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை வரை ஏழு கிலோ மீட்டர் நெடுஞ்சாலைதுறை சாலை உள்ளது.
சாலையை அப்பகுதியில் உள்ள சுமார் 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பஸ் மற்றும் கனரக வாகங்கள், கார், வேன், இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சாலை வழியாக சென்று வருகிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக இருந்ததால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் பள்ளி மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் சாலை மிகவும் மோசமான நிலைக்கு மாறியது.
வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நின்றன.
அகரம் ரயிலடி அருகே ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டதால் கனரக வாகனங்கள் புதுச்சத்திரம் வழியாக பரங்கிப்பேட்டைக்கு வந்து செல்கின்றன.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 13 கோடி ரூபாய் மதிப்பில் பரங்கிப்பேட்டை- பு.முட்லூர் சாலையை அகலப்படுத்தி, ரயிலடி அருகே புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

Source: தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக