புதன், 8 ஜூலை, 2009

தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பரங்கிப்பேட்டைக்கு ரூ.9.6 கோடி ஒதுக்கீடு

பரங்கிப்பேட்டை:

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 41 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி நடந்து வருகிறது.

கொத்தட்டை ஊராட்சி பஞ்சங்குப்பத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் புதிய குளம் அமைக்கும் பணியை சேர்மன் முத்துப் பெருமாள், ஆணையர்கள் நடராஜன், நீலகண்டன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் ஒன்றிய ஆணையர் நடராஜன் கூறுகையில், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் இந்த ஆண்டு 9 கோடியே 66 லட்சம் ரூபாயில் 236 பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய குளம் அமைத்தல், பழைய குளம் தூர்வாருதல், நீர் பாசன வாய்க்கால் தூர்வாருதல், புதிய சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

வேலை அளவிற்கேற்ற சம்பளம் வழங்கப்படுகிறது.

ஒரு நபர் 12 அடி நீளம், 8 அடி அகலமும், கடினமான இடங்களில் 10 அடி நீளம், 6 அடி அகலம் வெட்டினால்தான் முழுமையான சம்பளமான 80 ரூபாய் கிடைக்கும் என்றார்.

ஆய்வின் போது கவுன்சிலர் ராஜாராமன், ஊராட்சி தலைவர் பழனி, ஒன்றிய மேற்பார்வையாளர் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...