புதன், 8 ஜூலை, 2009

பரங்கிப்பேட்டை அருகே பூவாலை வாய்க்கால் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் ஆபத்து - அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பரங்கிப்பேட்டை:

பரங்கிப்பேட்டை அருகே பூவாலை வாய்க்கால் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் விரும்புகின்றனர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வில்லியநல்லூர் ஊராட்சியில் இருந்து வயலாமூர் வரை உள்ள கிராம நெடுஞ்சாலை உள்ளது.

இந்த சாலையில் பூவாலை அருகே பெரிய வாய்க்கால் பாலம் உள்ளது.

இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் பஸ், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் இப்பாலத்தின் இரண்டு புறமும் தடுப்பு கட்டைகள் உடைந்து விழுந்து விட்டன.

தற்போது பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாமல் மொட்டையாக காணப்படுகிறது.

தற்போது இந்த பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது.

மேலும் பாலத்தில் மின் விளக்கு வசதியும் இல்லாததால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்லுபவர்களுக்கு கண்டிப்பாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே பொது மக்களின் நலன்கருதி வில்லியநல்லூர் - பூவாலை சாலையில் உள்ள பாலத்தின் இரண்டு புறமும் உடைந்துள்ள தடுப்பு கட்டைகளை உடனடியாக கட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...