இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிப்பண்டிகை வருகிற 17ந் தேதி (சனிக்கிழமை) வருவதையட்டி இப்போதே தங்கள் ஊருக்கு செல்ல பொதுமக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.
இதற்காக ரெயில் மற்றும் பஸ்களில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில் கடலூரில் இருந்து சென்னைக்கு இந்த ஆண்டு 50 சிறப்பு பஸ்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.
இந்த பஸ்கள் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.
வருகிற 14ந் தேதி (புதன்கிழமை) காலை முதல் 19ந் தேதி (திங்கட்கிழமை) வரை சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இது தவிர ஏற்கனவே சென்று வரும் பஸ்களின் சர்வீசையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக