முன்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 அக்டோபர், 2009

கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 50 சிறப்பு பஸ்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிப்பண்டிகை வருகிற 17ந் தேதி (சனிக்கிழமை) வருவதையட்டி இப்போதே தங்கள் ஊருக்கு செல்ல பொதுமக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

இதற்காக ரெயில் மற்றும் பஸ்களில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில் கடலூரில் இருந்து சென்னைக்கு இந்த ஆண்டு 50 சிறப்பு பஸ்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.

இந்த பஸ்கள் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.

வருகிற 14ந் தேதி (புதன்கிழமை) காலை முதல் 19ந் தேதி (திங்கட்கிழமை) வரை சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இது தவிர ஏற்கனவே சென்று வரும் பஸ்களின் சர்வீசையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வியாழன், 14 மே, 2009

இந்திய இளைஞர் அறிவியல் கருத்தரங்கம்: மே 15க்குள் முன்பதிவு

சென்னை ஸ்ரீ பெரும்பூதூரில் நடைபெறவுள்ள "இந்திய இளைஞர் அறிவியல் கருத்தரங்கில்' கலந்து கொள்ள மே 15 - ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இக் கருத்தரங்கை நடத்துகின்றன.

ஜூன் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை கருத்தரங்கு நடைபெறும். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ஒருங்கிணைப்பாளர், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, 3வது குறுக்குத்தெரு, தரமணி, சென்னை - 113.
தொலைபேசி: 044 - 2254 1229, 2254 2698