சாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

போட்டாச்சு ரோடு


யாதவாள் தெரு-தீத்தாமுதலியார் தெரு சந்திப்பான இந்த இடத்தில் தான் கடந்த ஆண்டு மழை-வெள்ளத்தின் போது, தண்ணீர் பல நாட்கள் தேங்கி நின்று மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்தது , இப்போது தீத்தாமுதலியார் முழுவதும் சிமெண்ட் ரோடு போடப்பட்டுள்ளது.

படம்: நமது நிருபர் - சுஹைல்

சனி, 14 மார்ச், 2009

ரோ(ஓ)டு போட்டாச்சு...!!!




தமிழ் கூறும் நல்லுலகத்தில் புதியதாக ஆராய்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட (?!)
பல சொலவடைகளில் இதுவும் பிரசித்தி பெற்ற ஒன்று தான், அது என்ன தெரியுமா?

"கோடு போட சொன்னால் போதும் ரோடே போட்டுவிடுவார்கள்" என்று.

அதன் பரிணாம வளர்ச்சி தானோ, என்னவோ தெரியவில்லை, பரங்கிப்பேட்டை காஜியார் தெருவில் ரோடு போட சொன்னால் ஓடு போடுகிறார்கள்.
மழைக்காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை முதல் படத்திலும்,
குளிர் காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை இரண்டாவது படத்திலும்
கோடை காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை மூன்றாம், நான்காம் படங்களிலும் கண்டு களியுங்கள் (?!)

இனி இளவேனிற் காலம் மட்டும் தான் பாக்கி, அந்த காலத்தில் எப்படியோ?
இப்போது-அப்போது என்று காத்திருந்து வெறுத்து போன திருவாளர் பொதுஜனம் தனது பங்காக சாலைகளில் இருக்கும் பள்ளத்தை ஓடுகளை கொண்டு நிரப்பி விட்டார். பரங்கிப்பேட்டை நகரின் பெரும்பாலான தெருக்களில் சாலைகள் போடப்பட்டிருக்கையில் இந்த காஜியார் தெரு மட்டும் தார் வாடையை நுகராமல்
இருப்பது ஏனோ ?

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

விடிவு காலம் பிறக்குமா?



நீங்கள் புகைப்படத்தில் பார்ப்பது பரங்கிப்பேட்டை பேருராட்சியில் ஆறாவது வார்டில் இருக்கும் காஜியார் தெரு. இந்த தெரு நீண்ட நாட்களாக கவனிக்கப்படாமல் ரோடுகள் மிகவும் மோசமானநிலையில் இருக்கிறது.இரு சக்கரவாகனங்களில் செல்பவர்கள் முதற்கொண்டு, ரோட்டில் நடந்து செல்பவர்கள் வரை அனைவருக்கும் இந்த ரோடு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த ரோட்டில் குளம் ஒன்று உருவாகிவிடும். பரங்கிப்பேட்டையில் பல்வேறு சாலைகள் நன்றாக இருந்தாலும், இந்த சாலை மட்டும் அப்படியே தான் உள்ளது. என்றைக்குதான் இதற்கு விடிவு காலம் பிறக்குமோ?

நன்றி: http://www.portonovonews.blogspot.com

சனி, 21 பிப்ரவரி, 2009

சாலை





நீண்ட நெடு நாட்களாக கவணிப்பார் இல்லாமல் குண்டும் குழியுமாய் இருந்து
வந்த வாத்திய்யாப்பள்ளி தெரு சாலை, சமிபத்தில் நமது நெடுஞ்சாலைதுறையினரால் கண்டுக்கொள்ளப்பட்டு சாலைப்போடும் பணி நடைப்பெற்று வருகிறது.
இந்த பணி இன்னும் சில நாட்கள் தொடர்ந்து நடைப்பெறும் போல் தெரிகிறது.