பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

திங்கள், 20 ஏப்ரல், 2009

இவர் ஒரு வகையில் முக்கியமான நபர்.

இறைவன் நாடினால் மேலும் முக்கியத்துவம் பெறப்போகும் நபர்.

தற்போது பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கும் நம் மாணவ செல்வங்களுக்கு ஒரு முன்னுதாரண நபர்.

நூர் முஹம்மது நைனா-
இந்த மாணவரின் பெயர்.

பெரிய தெருவை சேர்ந்த இந்த மாணவர், தனது விடா முயற்சிக்கு ஒரு திடமான அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்.

இன்று மேற் கல்வி துறையின் அடையாளமாக கருதப்படும் அண்ணா பல்கலை கழகத்தில் நமதூரில் இருந்து சென்று பயிலும் முதல் மாணவர். நாமறிந்தவரை இதற்க்கு முன் நம்தூரை சேர்ந்த ஜனாப். ஷாபி (பொறியியலாளர்) அவர்கள் தான் அண்ணா பல்கலை கழகத்தில் சென்று படித்த ஒரே ஒருவர். அவருக்கு பின் இவர் தான். இந்த மாணவரின் முன்னாள் ஆசிரியர் என்ற வகையில் சிறு வயது முதலே கல்வியில் இவரின் ஆர்வத்தினையும், கேள்வி ஞானத்தையும் நான் மிக அறிவேன்.

ஊருக்கு ஒரு டாக்டர் , வக்கீல் என்ற கணக்கில் இவரது சாதனை இல்லாவிட்டாலும், (இன்ஷா அல்லாஹ் அதைவிட மேலும் சாதிப்பார்) கல்வியில் காலம் காலமாய் பின்தங்கி இருக்கும் ஒரு சமுதாயத்தில் இருந்து icon of education என்று கருதப்படும் ஒரு வாயிலுக்கு சென்று தனது கல்வி தேடலை தொடரும் இந்த சாதனை மாணவனை சாதாரணமாக கை குலுக்கி பாராட்டியவர்கள் கூட குறைவே. கல்விக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கும் நமது மக்களின் மனோபாவம் பூரிக்க செய்கிறது.

மிகவும் முயன்று சாதித்திருக்கும் இவரை மேலும் சாதிக்க வலைப்பூ சார்பாக்வாழ்த்துகிறோம்.

11 கருத்துரைகள்!:

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ சொன்னது…

உளப்பூர்வமான வாழ்த்துக்கள்!

படிப்பிலும், பண்பாட்டிலும், பழகுவதிலும் நம்மவர்களின் பெயரையும், நம் நகரின் பெயரையும் உயர்த்தி பிடிக்கவும் வாழ்த்துக்கள்!!

வாழ்க இளைய தலைமுறை!
வளர்க அவர்களின் செயல்முறை!!

அன்புடன்....
கலீல் பாகவீ

வினோத் கெளதம் சொன்னது…

அண்ணா பல்கலைகழகத்தில் மேற்படிப்பு.
உண்மையில் பெருமையாக உள்ளது.
நூர் முஹமது நைனவிற்கு வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்!

இடையில் முஸ்லிம் அல்லாத சிலரும் அடங்குவர்.

ஹம்துன் அப்பாஸ் சொன்னது…

மாணவர் நூர் முஹம்மது நைனா, சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துக்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ், அவரின் கல்வியறிவினை, இன்னும் விசாலப்படுத்துவானாக...

காஜியார் சந்து, சகோ.அஷ்ரப் அலி அவர்களின் மகன் ஃபாயிஜ் அலி,
கடந்த ஆண்டிலிருந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் (சுரங்கம்) படித்து வருகின்றார். NLC-யில் பணியாற்றுபவர்களின் குடும்பத்திலிருந்து கடந்த ஆண்டில் பொறியியல் (சுரங்கம்) படிக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தது இவர் ஒருவர் தான் என்பது இங்கே கூடுதல் தகவல்.

Unknown சொன்னது…

ஸ்டார் மாணவரான நூர் முஹம்மது நைனா அவர்கள் மேலும் பல பல சாதனைகளை புரிந்து அவரின் குடும்பத்துக்கும் நம் ஊருக்கும் பெருமையை சேர்க்க எல்லாம் வல்ல நாயனை வேண்டுகிறேன்.

நஜீர் உபைதுல்லாஹ்

Novian சொன்னது…

Congrats... And wish to hear form all Parangipettai students..

Vajhi Bhai சொன்னது…

முன்னாள் ஜனாதிபதி அபுல் கலாம் போன்று தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கி, மேலும் ஈருலக வெற்றியும் பெற வாழ்த்துகிறேன்.

வஜ்ஹுதீன்

Unknown சொன்னது…

மாணவரன நூர் முஹம்மது நைனா அவர்கள் மேலும் பல சாதனை புரிவதற்கு எல்லாம் வல்ல நாயனை வேண்டுகிறேன்.

சாலம்

ஹ .ஹாஜி மன்சூர்

மஹ்மூது பந்தரான் சொன்னது…

wish you all the best.

S.S.Alauddeen சொன்னது…

என்ன சாதனை புரிந்தார் என்ற விபரம் தெரிவித்தால் அவரை பாரட்ட ஏதுவாக இருக்கும். ஒரு விபரமும் இல்லாமல் ஸ்டார் மாணவர் என்பது மிகையாய் இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பது ஒரு சாதனை என்று கூற இயலாது. மேலும் அவர் எந்த Subject படிக்கிறார் என்ற தகவலும் தந்தால் நன்று.

S.S.Alauddeen சொன்னது…

ஸ்டார் மாணவர் என்ன சாதித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பது ஒரு சாதனை என எடுத்துக்கொள்ள முடியாது. அவரை பாராட்டும் அவரது ஆசிரியர் யார்? எந்த course எடுத்து படிக்கிறார்? Any way, I pray Almighty to give him the Star status in the future. Let us hope that he will prove himself that he is a person to make Novians proud of.

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234