விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 மார்ச், 2011

மகளிர் தின விழாவில் பணம் பட்டுவாடா! அதிகாரிகள் விசாரணையால் பரபரப்பு!!

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே, மகளிர் தின விழாவில் பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு மற்றும் புதுச்சேரி பலநோக்கு சமூக சேவா சங்கம் சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கடலூர், பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதாக, சிதம்பரம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அதிகாரிகள் திருநாவுக்கரசு, துரைசாமி, சந்திரகாசன், ரோசாரி ஆகியோர் விழா நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் ஒவ்வொரு அறைக்கும் சென்று சோதனை செய்தனர். பணம் மற்றும் பொருள் பட்டுவாடா எதுவும் நடக்காததால் புரளி என்பது தெரியவந்தது. இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

News & Photo : Dinamalar

ஞாயிறு, 22 நவம்பர், 2009

சிறுபான்மை நலத்திட்ட விளக்க விழா



சிறுபான்மை இனத்தவரின் நலனுக்காக பிரதம மந்திரியின் புதிய 15 அம்ச நலத்திட்ட விளக்க விழா நேற்று மாலை நான்கு மணியளவில் பரங்கிபேட்டை மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது.

முன்னதாக 3.30 மணியளவில் இதற்கான பேரணி ஒன்று நடைபெற்றது. அதில் ஏராளமான மக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிட்டத்தட்ட மொத்த மாவட்ட அரசு நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதனை பயன்படுத்தி கொள்வது போல பல்வேறு முக்கியஸ்தர்களும் தங்களின் மாவட்ட நலன் சார்ந்த கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர் முன் வைத்தனர்.

மாவட்ட கலெக்டர் P. சீத்தாராமன் மிக சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் உரையாற்றியது விழாவின் சிறப்பம்சமாக இருந்தது. சிறுபான்மை இன மக்களுக்கு அரசு எவ்வாறெல்லாம் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது என்பதை உதாரணங்களுடன் (உம் : உலமா ஓய்வூதியம் -அதன் பயன்கள்) குறிப்பிட்டு பேசிய கலக்டர், மக்கள் அதைபற்றிய விழிப்புணர்வு அற்று இருப்பதை பற்றி மிகவும் வருந்தி பேசினார். இது விஷயத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாதினை பாராட்டிய அவர் இன்னும் சிறப்பாக மக்களுக்கு அரசின் திட்டங்களை பற்றி விளக்கி சொல்லும்படி ஜமாஅத் தலைவர் M.S.முஹம்மது யூனுசினை கேட்டுக்கொண்டார்.

இந்த மாவட்டத்தின் முந்தைய கலக்ட்டர்கள் ஜமாஅத் நிர்வாகத்துடன் மிகவும் பரிவுடன் இருந்து வந்ததை அறிந்திருந்த மக்கள் புதிய கலக்டர் கலந்து கொள்ளும் இந்த முதல் விழாவில் அவரை பற்றிய எதிர்பார்ப்புகளுடன் வந்திருப்பார்கள். புதிய கலக்ட்டார் அவர்களை ஏமாற்றவில்லை என்றே சொல்ல வேண்டும்.

அரசும், ஜமாத்தும் இத்தனை முயற்சிகள் எடுத்தும் மக்கள் தங்களுக்கான நலத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள முன்வருவார்களா அல்லது வழக்கம் போல தூங்க செல்ல போகிறார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வியாழன், 19 நவம்பர், 2009

சிறுபான்மை நலத்திட்ட விளக்க விழா


சிறுபான்மை இன மக்களுக்கான பிரதம மந்திரியின் புதிய 15 அம்ச நலத்திட்ட விளக்க விழா நாளை வெள்ளிகிழமை மாலை 3 மணிக்கு மாவட்ட கலக்டர் தலைமையில் மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு இணைக்கப்பட்ட அழைப்பினை பார்வையிடவும்.

திங்கள், 6 ஜூலை, 2009

பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் விழாவில் மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு!

பரங்கிப்பேட்டை:

பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

அப்போது கும்மத்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பபட்டது.

மேலும் இவ்வவிழாவில் அரசுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும், கும்மத்பள்ளி ஆரம்ப பள்ளியின் வகுப்பறைக்கு பாயும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் புதிய நிர்வாகிகள் மற்றும் பழைய நிர்வாகிகள் உட்பட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

விழா இறுதியில் உணவு பரிமாறப்பட்டது.

புதன், 3 ஜூன், 2009

T-10 கிரிக்கெட் போட்டி நிறைவு பெற்றது!

கடந்த ஒருவார காலமாக கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் சார்பாக நடைபெற்ற T-10 கிரிக்கெட் போட்டி நிறைவு பெற்றது.

இதில் சுமார் 32 டீம்கல் கலந்து கொண்டது.

அதில் முதல் பரிசை பெற்ற அணி Tiger-A அணியினர்.

போட்டி நிறைவு விழாவில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி M.S.முஹமது யூனிஸ், ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.