பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 மார்ச், 2011

சிதம்பரம், புவனகிரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

சிதம்பரம், புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கோகலே அரங்கில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்கு பதிவு இயந்திரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

சிதம்பரம் கோட்டாட்சியரும் தேர்தல் அலுவலருமான இந்துமதி, மாவட்ட வழங்கல் அதிகாரியும் புவனகிரி தேர்தல் அலுவலருமான கல்யாணம் ஆகியோர் கலந்துகொண்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாள்வது குறித்து பயிற்சியளித்தனர்.

உதவி தேர்தல் அலுவலர்கள் ராஜேந்திரன், தனசிங், தேர்தல் துணைத் தாசில்தார் ராஜாராமன் உள்ளளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் சிதம்பரம், புவனகிரியை சேர்ந்த மண்டல தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Source: Dinakaran

ஞாயிறு, 8 நவம்பர், 2009

இலவச தொழிற் பயிற்சி

இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி

தொழில் முனைவோர் & திறன் மேம்பாடு பயிற்சி திட்டம்

புதன், 20 மே, 2009

பேரிடர் காலங்களில் கிராம மக்களுக்கு உதவ இளைஞர்களுக்கு பயிற்சி! கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேச்சு!!

பேரிடர் காலங்களில் கிராம மக்களுக்கு உதவி செய்ய தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கிராம இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் பேசினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் குறித்த கருத்தரங்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றன.

இக் கருத்தரங்கினை தொடங்கி வைத்து கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேசியதாவது:

தேசிய அளவிலும், மாநில அளவிலும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

உருவாக்கப்படவுள்ள மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் இடம் பெறுவார்கள்.

சாமியார் பேட்டையில் பேரிடர் மேலாண்மை குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டதால் சுனாமி காலத்தில் பெரும் உயிரிழப்பு, பொருளிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

கடற்கரை கிராமங்களில் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை வாழும் பொதுமக்களிடம் பேரிடர் காலத்தில் பேரிடர் வருவதை முன்கூட்டியே அறிந்து எடுத்துச் சொல்வதுடன் அதனிடமிருந்து காத்துக் கொள்ளும் வழிகளுக்கான சமூக விழிப்புணர்வு தயார் நிலையை, கலாசாரமாகக் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

பேரிடர் காலங்களில் கிராம மக்களுக்கு உதவிகளை செய்வதற்காக தனியார், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கிராம இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து பொது மக்களுக்கு உதவிகள் செய்யும் வண்ணம் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

தனியார் தொண்டு நிறுவனங்களும் பேரிடர் காலங்களில் தங்களது ஒத்துழைப்பினை முழுமையாக வழங்கிட வேண்டும் என்றார்.

தூங்கிய அதிகாரிகளுக்கு கலெக்டர் 'செம டோஸ்':

கருத்தரங்கில் பங்கேற்று தூங்கிய அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்' விட்டார்.

கருத்தரங்கில் சுனாமி, வெள்ளம், புயலால் பாதிப்பு குறித்தும், பேரிடரிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வது பற்றியும் 'சீரியசாக' கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அதிகாரிகள் சிலர் நிம்மதியாக குரட்டை விட்டு நாற்காலியிலேயே தூங்கிக் கொண்டிருந்தனர்.

இதை கவனித்த கலெக்டர் ராஜேந்திர ரத்னு, அந்த அதிகாரிகளை எழுப்பி தாம் என்ன பேசினோம் என்பதை கூறுமாறு கேட்டார்.

தூங்கிய அதிகாரிகள் ஒன்றும் புரியாமல் 'திருதிருவென' விழித்தனர்.

உடனே கலெக்டர் அதிகாரிகளுக்கு 'செம டோஸ்' விட்டார்.

தொடர்ந்து கூட்டம் கலகலப்பாக நடந்தது.

சுய வேலைவாய்ப்பு தொழில் பயிற்சிகள்

மதுரை டி. கல்லுப்பட்டி டாக்டர் ஜே.சி. குமரப்பா கிராமிய தொழில் நுட்ப வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் சுய தொழில் ஆர்வலர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சிகள் ஜூன் 4-ம் தேதி தொடங்குகிறது.

பயிற்சிகளின் விவரம்:

  • ஐந்து மாத கால தையல் மற்றும் எம்பிராய்டரி (மகளிர் மட்டும்)

  • நான்கு மாத கால எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள் பழுது நீக்கும் பயிற்சி

  • மூன்று மாத கால கட்டிங் மற்றும் டெய்லரிங் (மகளிர் மட்டும்)

  • இரண்டு மாத கால ஃபிட்டர், பிளம்பர் மற்றும் பம்ப் மெக்கானிசம் பயிற்சி

  • ஒரு மாத கால டிடர்ஜெண்ட் சோப்பு தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.

உதவித்தொகை பயிற்சிகள்:

  • ஆறு மாத கால காலணி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பு

  • மூன்று மாத கால காலணி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பு

  • மோட்டார் வைண்டிங் உள்ளிட்ட பயிற்சிகளும்

  • இரண்டு மாத கால நோட்டு புத்தகங்கள் தயாரித்தல்

  • குளியல் மற்றும் சலவை சோப்பு தயாரித்தல்

  • பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தல்

  • மண்பாண்டம் தயாரித்தல்

  • ஒரு மாதகால ஸ்பைசஸ் மற்றும் மசாலா தயாரித்தல்

  • மோட்டார் வைண்டிங் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படும்.

18 வயதுள்ள குறைந்தபட்சம் 8-வது வகுப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகை திட்டத்தில் உள்ள பயிற்சிகளில் சேர்ந்து விடுதிகளில் தங்குபவருக்கு மாதம் ரூ. 800 உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பம் மற்றும் விவரக் குறிப்பை ரூ. 25 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

தபாலில் பெற ரூ. 35 மணியார்டர் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்போர் தங்களைப் பற்றிய முழு விவரத்துடன் பெற விரும்பும்

பயிற்சியைக் குறிப்பிட்டு தகுதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரூ. 5க்கான தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட கவர் ஆகியவற்றை இணைத்து மே 31 - ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

  • டாக்டர் ஜே.சி. குமரப்பா கிராமிய தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனம்,

  • காந்தி நிகேதன் ஆசிரமம்,

  • டி. கல்லுப்பட்டி - 625 702,

  • மதுரை மாவட்டம்.

  • தொலைபேசி: 04549 - 272 365.