செவ்வாய், 14 செப்டம்பர், 2010

வெள்ளாற்றுப்பாலம்: கரைபுரளும் நினைவுகள்



உயர்மட்ட வெள்ளாற்றுப்பாலம், இது பல வணிகங்களை மட்டுமின்றி உறவுகளையும் பலப்படுத்தப்போகும் பாலம். பரங்கிப்பேட்டை, கிள்ளை, பொன்னந்திட்டு, முடசல்ஓடை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்ட கால கனவு தற்போது நிறைவேறியுள்ளது.


23.65 கோடி ருபாய் மதிப்பில் இந்தப்பாலம் பொலிவுடன் வெள்ளாற்றின் குறுக்கே அமையப் பெற்றதற்கு இதன் பிண்ணனியில் கணக்கிலடங்கா உழைப்புகள் மறைந்திருந்தாலும் அவற்றையெல்லாம் இங்கு பட்டியலிடுவது சாத்தியமற்றது.

இருப்பினும், சில நன்றிக்குரியவர்கள் நாம் இங்கு நினைவுகூர்வது அவசியமாகிறது.

1980 களில் கடலூர் நகரத்தில் நடைபெற்ற மாவட்ட மன்றக் குழு கூட்டத்தில் பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்க வெள்ளாற்றில் தொங்கும் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பினார் அன்றை சட்டமன்ற உறுப்பினர் வி.வி. சுவாமிநாதன்.

அரசியல் கட்சியின் முக்கிய பதவியிலிருந்தும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த வெள்ளாற்றுப் பாலத்திற்கு 1980 களிலிருந்து தொடர்ந்து பல கோரிக்கைகள், கூட்டங்கள், தீர்மானங்கள் என்று குரல் கொடுத்தவர்களில் மிகவும் முக்கியமானவர் இஸட்.ஃபஜ்லுர் ரஹ்மான் (முன்னாள் மாநில பொதுச் செயலாளர், மதசார்பற்ற ஜனதாதளம், தமிழ்நாடு).

இதற்காக சுமார் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள், கோரிக்கைகள் என்று பல அரசு கதவுகளை தட்டியிருக்கிறார். இப்பாலம் அமையப்பெற 1999 மற்றும் 2000-வது ஆண்டுகளில் கிரஸண்ட் நல்வாழ்வுச் சங்கமும் கூட்டாக இணைந்து செயல்பட்டுள்ளது.

05-11-2000 அன்று அன்று கிரஸணட் நல்வாழ்வு சங்கமும் கிழக்கு கடற்கரை வாழ் மக்கள் நலச்சங்கமும் இணைந்து, ஒரு முக்கிய கருத்தரங்கத்தினை மஹ்மூதியா ஓரியண்டல் பள்ளியில் நடத்தின. இதில் மதசார்பற்ற ஜனதாதள தலைவர் ஜி.ஏ. வடிவேலு மற்றும் சிதம்பரம் வட்டாச்சியர் எஸ் விஸ்வநாதன் கலந்துக்கெண்டனர். இந்த கருத்தரங்கத்தினை இஸட். பஜ்லுர்ரஹ்மானுடன் அன்றைய கிரஸண்ட் சங்கத் தலைவர் என்.ஹபீபுல்லாவும் ஏற்பாடு செய்ததில் மீடியாக்கள் மற்றும் அதிகார மையங்களின் காதுகளுக்கு எட்டின.

அதன் பின்னர் தொடர்ந்த ஃபாளோ-அப்ஸின் பயனாக 2006 ஆண்டு இறுதியில் பாலம் அமைவது உறுதி என்ற நிலைக்கு வந்தபிறகு ஒரு வழியாக அன்றைய தமிழக அரசினால் பாலம் கட்ட அனுமதி வழங்கப்ட்டது.

சுனாமிக்குப் பிறகு சில மறுமலர்ச்சித் திட்டங்களின் பயனாக மந்தமாக இருந்த திட்டப்பணிகள் உடனே துவங்கப்பட் வேண்டும் என்று கோரிக்கைகள் அதிகம் ஒலித்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இத்திட்டப்பணி துவங்குவதற்கு எந்த தடையும் ஏற்படவில்லை; பணிகள் இன்னும் சூடு பிடித்தன. முந்தைய ஆட்சிக் காலத்தில் கோரப்பட்ட திட்டமதிப்பீடு மீண்டும் இன்னும் அதிகமாக்கி முறைப்படி துவக்கப்பட்டது.

சுனாமி மறுவாழ்வுத் திட்டங்களைத் தொடர்ந்து அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்களும் இதற்கு உறுதுணையாக இருந்தது. MYPNO வலைப்பூவிற்கு கொடுத்த செய்தியில் விரைவில் பாலப்பணிகள் துவங்கும் என்றார் பேரூராட்சித் தலைவர் முஹமது யூனுஸ். அதன்படி, 2008-ல் பணிகள் துவங்கியது. ஆரம்பத்தில் படுஜோராக பணிகள் துவங்கிளாலும் பருவமழை, வெள்ளம் மற்றும் சில காரணங்களால் அவ்வப்போது பணிகள் மந்தமடைந்தது. தற்போது அவற்றுக்கு அப்பாற்பட்டு இன்று அழகு பொலிவுடன் பொதுமக்களின் போக்குவரத்திற்காக தயாரகிவிட்டது.

நன்றிக்குரியவர்கள்:

இஸட். பஸ்லூர்ரஹ்மான், முன்னால் மாநில பொதுச் செயலாளர், மதசார்பற்ற ஜனதாதளம், தமிழ்நாடு
எம்.எஸ். முஹமது யூனுஸ், பேரூராட்சித் தலைவர், பரங்கிப்பேட்டை
செல்வி ராமஜெயம், சட்டமன்ற உறுப்பினர், புவனகிரி தொகுதி
கிழக்குகடற்கரை வாழ் மக்கள் நல்வாழ்வுச் சங்கம், கடலூர்
கிரஸண்ட் நல்வாழ்வுச் சங்கம், பரங்கிப்பேட்டை
ககன்தீப்சிங் பேடி, முன்னால் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்
கம்யூனிஸ்ட் கட்சி (இடது மற்றும் வலது)
வெ. சாமிநாதன், நெடுஞ்சாலைதுறை அமைச்சர்
எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
வி.தமிழ்ச்செல்வம், மு. கோட்டப் பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கடலூர்
இரா. சண்முகம், மு. கோட்டப் பொறியாளர், நெடுஞ்சாலை ஊரகத்துறை கடலூர்
இராஜேந்திர ரத்னூ, முன்னால் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்
தா. கிருஷ்ணன், முன்னால் நெடுஞ்சலைத்துறை அமைச்சர்
ஜி.ஏ.வடிவேலு, மு. தலைவர், மதசார்பற்ற ஜனதாதளம்
இராதாகிருஷ்ணன், சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர், நெடுஞ்சாலைத்துறை
டாக்டர். எஸ். நூர் முஹம்மது, மு.து.தலைவர், பரங்கிப்பேட்டை பேரூராட்சி
பாவாசா மரைககாயர், மு. பேரூராட்சி மன்ற உறுப்பினர், பரங்கிப்பேட்டை
தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD)
ஆசியன் வளர்ச்சி வங்கி
கல்யாணம், கோட்டப் பொறியாளர், Nabard
மலர் சத்தியமூர்த்தி, மு. தலைவர், கிள்ளைப் பேரூராட்சி
ஜெனிஃபர் சந்திரன், மு. மீன்வளத்துறை அமைச்சர்
கா.மு. கவுஸ், மனிதநேய சேவை அமைப்பு, பரங்கிப்பேட்டை
கனகசபை, மீனவப்பேரவை, சலங்குகாரத் தெரு, பரங்கிப்பேட்டை

இவையனைத்தும் எங்களுக்கு கிடைத்த தகவல்கள் மட்டுமே. இதில் இன்னபிற முக்கியமானவர்களும் விடுபட்டிருக்கலாம். எனில், வாசகர்களாகிய தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் கருத்துக்கள் வாயிலாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும் இணைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...