ஞாயிறு, 30 ஜனவரி, 2011

அனல் மின் நிலைய வேலி பிரச்னை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு

பரங்கிப்பேட்டை : அனல் மின் நிலையத்திற்கு வேலி அமைப்பது குறித்து டி.ஆர்.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பம் கிராமத்தில் கடந்த 20ம் தேதி ஐ.எல்.எப்.எஸ்., தனியார் அனல்மின் நிலையத்தினர் வாங்கிய இடத்தில் வேலி அமைத்ததை கிராமத்தினர் தடுத்து நிறுத்தினர். ஆர்.டி.ஓ., இந்துமதி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படாததால் பிப்ரவரி 5ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று மீண்டும் ஆர்.டி.ஓ., இந்துமதி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி, கிராமத்தினர் தரப்பில் விவசாய சங்கத் தலைவர் சண்முகம், பரமானந்தம், விவசாய சங்க மாவட்ட செயலர் சேகர், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலர் சேகர், கம்பெனி தரப்பில் மோனீஷ் அகுஜா, பொதுமேலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வராததால் மீண்டும் டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Source: Dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக