புதன், 9 மார்ச், 2011

விஷ வாயு கசிவு - கண் துடைப்பு ஆய்வு குழு?

கடந்த திங்கள் இரவு கடலூர் சிப்காட்டில் அமைந்துள்ள சாஷன் கெமிக்கல் ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால், விஷ வாயு கசிந்ததை தொடர்ந்து 100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதை முன்பு செய்தியாக வெளியிட்டிருந்தோம். விஷ வாயு கசிந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ஆலை தற்போது தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், விஷ வாயு கசிவு ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தர வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி இதே சாஷன் கெமிக்கல்ஸ் உட்பட சில ஆலைகளில் சோதனை நடத்திச் சென்றார். இன்று வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது விடை தெரியாத கேள்விகள். அன்று சோதனை செய்ய வந்த கனிமொழி இன்று ராஜ மரியாதையுடன் சோதனைக்கு ஆளாக இருக்கிறார் என்பது தனிக் கதை. அப்போது நடந்த ஆய்வுகளுக்கே விடை தெரியாத நிலையில் தமிழக அரசால் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவும் கண் துடைப்பு ஆய்வு குழு என்றே எண்ணத் தோன்றுகிறது.தேர்தல் நெருங்கி விட்ட இந்த வேளையில் பொது நல அமைப்புகளும், சமூக ஆர்வலகளும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் பல்வேறு வகையான மாசுபாட்டால் சிக்கி தவிக்கும் கடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களுக்கு ஓரளாவாவது நிம்மதி கிடைக்குமே செய்வார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...