வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. மாவட்ட வருவாய் அதிகாரிகள் தேர்தல் சிறப்பு கண்காணிப்பளார்களாக நியமிக்கப்பட்டனர்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பொருள்கள் எடுத்து செல்கிறார்களா என தீவிர வாகன சோதனை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் தமிழகம் முழுவதில் இருந்து ரூ.17 கோடி சிக்கியுள்ளது. இந்த சோதனை ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களிலும் நடைபெற்று வருகிறது.
தற்போது கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியான மரக்காணத்தில் இருந்து கிள்ளை வரையிலான 68 கிராமங்களை கொண்ட 130 கி.மீ. தூரத்தை கடலோர காவல் படையினர் இரண்டு அதிநவீன படகுகள் மூலம் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரோந்து பணி கடலோர காவல் படையின் இன்ஸ்பெக்டர் வசந்தன் தலைமையில் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி வரை நடைபெறும். ஒவ்வொரு படகிலும் 5 போலீசார் இருப்பார்கள் என கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் கூறினார். Source: Daily Thanthi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக