
இதையடுத்து மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், வேட்பாளருமான ஸ்ரீதர் வாண்டையார் நேற்று அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமை யில், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
ஒன்றிய குழுத் தலைவர் முத்து பெருமாள் இல்லத்திற்கு அமைச்சருடன் வந்த அவர், அங்கு திமுக, பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்பு மணி ஆகியோரை தைலாபுரத்தில் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினேன். சிதம்பரம் தொகுதி எம்பியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவனையும் சந்தித்து ஆதரவு கோரினேன். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களையும் சந்திக்க உள்ளேன்.
இன்று சிதம்பரம் நகரம், குமராட்சி ஒன்றியம், பரங்கிப்பேட்டை ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறேன். இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வது குறித்து அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.
திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்து பெருமாள், பூபாலன், ஜெயராமன், பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், திமுக நிர்வாகிகள் பாண்டியன், காண்டீபன், பாமக நிர்வாகிகள் முடிவண்ணன், முருகன், கோபு, மூமுக மாநில நிர்வாகிகள் ரவிச்சந்திர வாண்டையார், கேப்டன் நடராஜன், கோகுல் வாண்டையார், செல்வராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் சேதுமாதவன், ராஜேந்திரன், ஜெயச்சந்திரன், அஸ்கர் அலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் எழில் வேந்தன், தமிழ் வளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Source: Dinakaran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக