புதன், 23 மார்ச், 2011

பரங்கிப்பேட்டையில் பாலகிருஷ்ணன்


பரங்கிப்பேட்டையின் காலநிலையை போன்றே, அரசியல் சூழ்நிலையும் மெல்ல சூடு பிடித்து வருகிறது. அ.இ.அ.தி.மு.க அணியில் அங்கம் வகிக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் பாலகிருஷ்ணன், இன்று பரங்கிப்பேட்டையில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுக - ஊழியர் கூட்டத்தில் கலந்துக்கொண்டார், முன்னதாக முட்லூரில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுக - ஊழியர் கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் M.L.A. கலந்து கொண்டு நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மூசா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், நகர செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், நகர அவைத்தலைவர் மலை.மோகன், ஷாஜஹான், காமில், சுல்தான், அன்சாரி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ், தே.மு.தி.க சார்பில் மெய்தீன் கான், அலி முஹம்மது கவுஸ், தமுமுக - இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஜாக்கீர், ஹஸன் அலி, செய்யது ஆகியோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் "இறைத்தூதர்கள் வரலாறு" என்ற நூல் வேட்பாளர் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது

1 கருத்து:

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...