புதன், 23 மார்ச், 2011

கலைஞர் வருகை, களைக்கட்டியது முட்லூர்...!!!

முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று மாலை திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார். நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். திருவாரூர் செல்வதற்காக, முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று காலை 6.40 மணிக்கு, கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார்., வழியெங்கும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினரால் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க சார்பில் பெரியப்பட்டில் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், தி.மு.க. ஒன்றிய செயலாளருமான முத்து.பெருமாள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முட்லூர் MGR சிலை அருகில் நண்பகல் 12.45 மணிக்கு பரங்கிப்பேட்டை நகர தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், நகர செயலாளர் பாண்டியன், கடலூர் மாவட்ட தி.மு.க பிரதிநிதி A.R.முனவர் ஹுசேன், நகர அவைத்தலைவர் தங்கவேல், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செழியன், ஒன்றிய பிரதிநிதிகள், M.K.பைசல் யூசுப் அலி, கோமு, கவுன்சிலர் M.G.M.ஹாஜா கமால், வேலவன், தவ்ஹீத், தெளலத் அலி, முஸ்லீம் லீக் நகர தலைவர் பசீர் அஹமது, பா.ம.க ஹமீது கவுஸ், சட்டநாதன், ஹபீப் ரஹ்மான், ஜாபர், கோவிந்தராஜ், சண்முகம், K.H.ஆரிபுல்லாஹ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டதால் முட்லூர் பகுதியே பரப்பரப்பாக காணப்பட்டது. இவ்வரவேற்பு நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டையிலிருந்து ஏராளமான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

4 கருத்துகள்:

  1. வீர மரைக்கான்23 மார்ச், 2011 அன்று 4:45 PM

    சிறிதளவு இஸ்லாமிய விழிப்புணர்வுள்ள பரங்கிப்பேட்டையில் கலைஞர் வருகைக்காக நம்முடைய சமுதாய பெண்கள் ரோட்டில் நிற்பது வேதனையாகயுள்ளது!

    வேதனையுடன்,
    வீர மரைக்கான்...

    பதிலளிநீக்கு
  2. இதுக்கும் முன்னதாக இந்த பகுத்தரிவு பகலவன்!!!!!???? கெலம்புரதுக்கு முன்னாடி தேங்காய உடைச்சி வழி அனுப்புனாங்கலே அந்த போட்டவயும் சேத்து போட்டு இருந்தா நல்லா இந்திக்குமே

    பதிலளிநீக்கு
  3. சும்மா மரைக்கான்23 மார்ச், 2011 அன்று 9:04 PM

    என்ன சொல்றிங்க வீர மரைக்கான்
    அள்ளி கொடுக்குற அவுலியா குஞ்சு, மூணு (தொகுதி) கொடுத்து முஹந்து விட்ட மொம்கொஸ் மரைக்கார், கருணை நிதி நேருல வரும்போது சமுதாய பெண்களாவது சுனாமி திலகமாவது...
    - சும்மா மரைக்கான்

    பதிலளிநீக்கு
  4. dear mr veer marican,

    the lady in white choose to be there, its her choice, no one put a gun on her head to attend this .............pls keep out your islamic agenda from this.......

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...