பரங்கிப்பேட்டை: சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு பலத்தப் பாதுகாப்புடன் துவங்கியது. பரங்கிப்பேட்டை அரசு மகளிர் பள்ளி, கும்மத்துபள்ளி, சலங்குகாரத்தெரு அரசினர் ஆரம்ப பள்ளி உட்பட கரிகுப்பம், சேவாமந்திர் பள்ளிகளில் அமையப்பெற்றுள்ள வாக்குச் சாவடிகளில் விறுவிறு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி, பெண்கள் அதிக ஆர்வத்துடன் அவர்களுக்கான தனி வரிசையில் நின்று வாக்கு பதிவை செலுத்தி வருகின்றனர். வாக்குச் சாவடிக்குட்பட்ட எல்லையில் கண்காணிப்பு அதிகப்படுத்தப் பட்டுள்ளது.
முன்னதாக நேற்றே இந்த வாக்குச்சாவடிகள் பலத்த பாதுகாப்பின் கீழ் வந்து, வாக்களிக்கும் நடைமுறைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. துவங்கியவுடன் ஒரு சில பூத்துகள் தவிர கூட்டம் சற்று குறைவாக இருந்தது. தற்போது (காலை மணி 9.15) மக்கள் கூட்டம் சற்று அதிகமாக வரத்துவங்கியுள்ளது. எல்லைக்கு வெளியே பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக