திங்கள், 23 மே, 2011

கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்: ஐ.ஏ.எஸ். மாணவி அனுகிரகா பேட்டி!

பரங்கிப்பேட்டை ; "கடின உழைப்பு இருந்தால், எளிதாக சாதிக்க முடியும் என, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற, அனுகிரகா கூறினார். பரங்கிப்பேட்டை ஐ.ஓ.பி., வங்கியில் மேலாளராக இருப்பவர் பாண்டியதுரை. இவருக்கு அனுகிரகா, கார்த்திகா ஆகிய இரண்டு மகள்களும், சரவணன் என்ற மகனும் உள்ளனர். அனுகிரகா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். கடலூர் செயின்ட் மேரிசில் பள்ளிப்படிப்பை முடித்தார். கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி., கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார். ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத, கடந்த ஒரு ஆண்டாக புதுடில்லியில் தங்கி படித்து, முதல் தேர்விலேயே தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதுகுறித்து அனுகிரகா கூறியதாவது: கிராம பகுதியில் இருந்து ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். கிராமத்தில் படித்தவர்களுக்கு, அதிக திறமை உள்ளது. ஆனால், அவர்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லாததால் சாதிக்க முடியவில்லை. யார் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு முயற்சி, விழிப்புணர்வு இருந்தால் வாழ்க்கையில் எளிதாக முன்னேறலாம். கடின உழைப்பு இருந்தால் எளிதாக சாதிக்க முடியும். கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவேன். கல்வி மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்கு பாடுபடுவேன்.இவ்வாறு அனுகிரகா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...