ஞாயிறு, 12 ஜூன், 2011

பரங்கிப்பேட்டை அருகே தகராறு: தந்தை, மகன் மீது தாக்குதல்; கார் கண்ணாடி உடைப்பு; 6 பேர் கைது!

பரங்கிப்பேட்டை அருகே ஏற்பட்ட தகராறில் தந்தை, மகனை தாக்கி, கார் கண் ணாடியை உடைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் கிராமத்தில் அம்மன்கோவில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது.கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு பாட்டுக்கச்சேரி நடந்தது.இதை பார்ப்பதற்காக பரங்கிப்பேட்டையை சேர்ந்த சேகர் மனைவி செல்வி (வயது 37).அவரது மகன் ரகு (24) ஆகிய 2 பேரும் சின்னூர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் குட்டியாண்டவர் கோவில் அருகே சென்ற போது பரங்கிப்பேட்டை மாதாகோவில் தெருவை சேர்ந்த சத்தியராஜ், வினோத் குமார், முரளி உள்பட 8 பேர் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். இதை அந்த வழியாக சென்ற செல்வி தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சத்திய ராஜ் மற்றும் சிலர் அவரிடம் வாக்கு வாதம் செய்தனர்.

இதை செல்வி மகன் ரகு தட்டிக் கேட்டார். அவரை சத்தியராஜ், வினோத்குமார், செந்தில்குமார், சரவணன், முரளி, மகேஷ், சுந்தர்ராஜ், சதீஷ் ஆகிய 8 பேரும் தாக்கினர்.சம்பவம் கேள்விபட்டு வந்த ரகுவின் தந்தை சேகரையும் அவர்கள் தாக்கினர்.

இந்த தாக்குதலின் போது சலங்குகார தெருவை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான காரை டிரைவர் நடராஜன் அங்கு நிறுத்தினார். இதை பார்த்த சத்தியராஜ் உள்பட 8 பேரும் சேர்ந்து கார் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றனர். இதற்கிடையில் இந்த தாக்குதலில் காயமடைந்த ரகு,சேகர் ஆகிய 2 பேரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி கார் டிரைவர் நடராஜன் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து சத்தியராஜ், செந்தில் குமார், முரளி, மகேஷ், சுந்தர்ராஜ், சதீஷ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வினோத்குமார், சரவணன் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

3 கருத்துகள்:

  1. இறைவா எல்லாரேயும் காப்பாதுப்பா

    பதிலளிநீக்கு
  2. mypno kku enna aatchi oor news ondrum illaiya? ella newsm paper newsa irukku

    பதிலளிநீக்கு
  3. "பாட்டு"கேக்கபோனேன் "பாடை"க்கட்டும் அளவுக்கு அடி வாங்கி வந்தேன்

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...