புதன், 15 ஜூன், 2011

முன்னோடியாகிறது இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்..!



முஸ்லிம்கள் அதிகம் வாழும் பல ஊர்களில் ஒவ்வொரு முஹல்லாவுக்கும் ஒரு ஜமாஅத் என்ற அடிப்படையில் ஊருக்கு குறைந்தது ஐந்து ஜமாஅத் என்றளவில் இருந்து ஐக்கியம் என்பது ஐயம் மிக்க வினாவாகவே இருக்கும், ஆனால் பெயருகேற்றப்படி ஒரே ஐக்கிய ஜமாஅத் என்பது, பரங்கிப்பேட்டைக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் முதன்மையான ஒன்றாகும்.

சமுதாய ஒற்றுமை, மத நல்லிணக்கம், கல்வி, மகளிர் நலன், வட்டியில்லா கடனுதவி, சிறுதொழில்களுக்கான வாய்ப்புகள், மருத்துவம், அவசரக்கால ஊர்திகள், இயற்கை இடையூறுகளின் போது உதவி என்று பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பல முஸ்லிம் ஊர்களுக்கு முன்னோடியாகவும் இருந்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

இதன் அடுத்த கட்டமாக அமைக்கப்பட்ட கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில், பல ஊர்களில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் பரங்கிப்பேட்டையுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் கடலூர் முதுநகர் (OT) ஜமாஅத்தார்கள் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையிலான நிர்வாகிகளை கடந்த சில தினங்களுக்கு முன் சந்தித்து ஜமாஅத் செயல்பாடுகளை கேட்டறிந்தனர், மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைப்பெற்ற இச்சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடைப்பெற்றது.

படம்: TNTJ PNO

7 கருத்துகள்:

  1. before want to say some thing please use...... you are muslim.

    பதிலளிநீக்கு
  2. தினமலர்காரன் உங்க கிட்டே தாயம் வாங்கனும் அப்பாஸ் பாய்

    புரியும்ன்னு நெனக்கிறேன். எலெக்ஷன்லே நிக்கிறிங்களா?

    பதிலளிநீக்கு
  3. கடலூர்காரஹ மீட் பன்னுனது ஜாமத்துகரஹலய இல்ல மீராப்பல்லி நிர்வாகியயா
    போட்டொல மீராப்பல்லி நிர்வாகி இக்கிராரே அதான் கேக்குரென்.

    பதிலளிநீக்கு
  4. வழிப்போக்கன்16 ஜூன், 2011 அன்று 1:20 PM

    எதை எடுத்தாலும் குறை சொல்லுவேன் என்று போகாமல் செய்தியை செய்தியாக அதன் பொருளுடன் பாருக்க பழகுங்கள்.
    சகோ. அப்பாசுக்கும் ஜமாத்துடன் பல கருத்து மாறுபாடுகள் இருக்கலாம்.
    நமது ஜமாஅத் என்ற உணர்வுடன், அதன் நல்ல விஷயங்களை செய்தியாக போடுவதால் இப்படி கமன்ட்டடிப்பது நல்லதல்ல.
    நல்ல விஷயங்கள் நடைபெற தடையாகவும் இருக்கும்
    --- வழிப்போக்கன்

    பதிலளிநீக்கு
  5. யாருப்ப அது அண்ணன் ஜமாத்த கலாச்சது
    அண்ணனட அடிபொடிலாம் டென்ஷனாகிட்டாங்க பாருப்பா

    பதிலளிநீக்கு
  6. நஜீர் உபைதுல்லாஹ்16 ஜூன், 2011 அன்று 8:28 PM

    வாசகர்களின் கருத்துக்களை மட்டுறுத்துனரின் பார்வைக்கு பின் வெளியிடுமாறு வேண்டுகிறேன்.

    நஜீர் உபைதுல்லாஹ்

    பதிலளிநீக்கு
  7. யாரெல்லாம் தங்களின் பெயரை போடவில்லையோ அவர்களின் கருத்துக்களை வெளியிடக் கூடாது என்பதை எப்போது இந்த மட்டுறுத்துனர்கள் உணர போகிறார்கள் என்பது விளங்கவில்லை. உண்மையான சமுக அக்கறை இருக்குமானால் பெயரை போடவேண்டியது தானே! ஏன் இந்த பயம்!
    அன்புடன்
    மு. சாஜிதூர் ரஹ்மான்
    துபாய்

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...