செவ்வாய், 14 ஜூன், 2011

ஹஜ் யாத்ரிகர்களுக்கு மேலும் சலுகைகள்

ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இந்தியப் பயணிகளுக்கு மேலும் சில சலுகைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா திங்கள் கிழமை அறிவித்தார்.


எழுபது வயதுக்கு மேற்பட்ட பயணிகள் உடன் துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லலாம்.


தொடர்ந்து 3 ஆண்டுகளாக விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் சீட்டு குலுக்கல் ஏதும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டு விடுவார்கள்.


பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தால், போலீஸ் சரிபார்ப்புகூட இல்லாமல், 8 மாதங்களுக்குச் செல்லத்தக்கதாக பாஸ்போர்ட் வழங்கப்படும்.


யாத்திரைக்கு சாமான்கள் எடுத்துச் செல்லும் நடைமுறை எளிதாக்கப்படும்.


இந்தியாவில் 21 ஊர்களிலிருந்து ஹஜ் யாத்திரைக்கு விமானங்களில் நேரடியாகச் செல்லலாம்.


ஹஜ் பயணத்தின்போது இந்திய யாத்ரீகர்கள் தங்க 1,25,000 வீடுகள் வாடகைக்கு எடுக்கப்படும்.


ஜித்தாவில் இந்தியத் தூதரகத்தில் இந்திய யாத்ரிகர்களுக்கு உதவுவதற்காக தனிப்பிரிவு செயல்படும்.


கடந்த ஆண்டு 1,71,671 பேர் யாத்திரை மேற்கொண்டனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.


இத்தகவல்களை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நிருபர்களிடம் தில்லியில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...