சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி திருத்த மசோதாவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில், ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. இதில் 1-ம் மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வி தொடர வேண்டும். இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிபுணர் குழு அறிக்கை 2 வாரத்துக்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், நிபுணர் குழு அறிக்கை மீது ஒரு வாரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறும் வரை 2,3,4,5, 7,8,9,10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த வேண்டாம். தீர்ப்புக்கு பின் பாடம் நடத்தலாம் என்றும் கூறியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
‘சமச்சீராய்’ காலில் விழுவோம்
பதிலளிநீக்கு========================
அய்யா கொடுத்தார், அதனை
அம்மா பறித்தார் எனக்
குழந்தையின் கல்விக்கு
எண்ணப்பட உள்ள பணக்
கற்றைகளை எண்ணியிருக்கும் பெற்றோரின்
சோகம் பெரிதா?
இந்தக் கற்றையை விட, அய்யாவிற்கு
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையும்,
திகாருக்குள் வாடும் பூவின் சோகமும் பெரிதா?
சமச்சீருக்குக் கல்லறையா?
பணப்பெட்டியின் சில்லறையா?
‘மெட்ரிக்குலேஷன்’ தளபதியின்
பொருள் பொதிந்த சோகம் பெரிதா?
சமச்சீருக்கு சட்டசபையில்
ராணி குழிவெட்ட, வலப்புறமும் இடப்புறமும்
மண்ணள்ளிப் போட்ட வலது இடதுகளின்
கருத்தரங்க நாடகத்தின் கவலை பெரிதா?
பெரிதாகிய கவலையால் வெளிறி வெளியேறிய
சிவப்போ கால்வழியே ஓடுகிறது.
உள்நாட்டுத் தமிழா,
கவலையோடு இருந்ததினி போதும்..
சமச்சீரெல்லாம் அப்புறம் பாரும்.
“பாத்தியா பாத்தியா பயாஸ்கோப்பு பாத்தியா”
“சட்டசபைப் பாப்பாத்தி தீர்மானம் பாத்தியா”
வெங்காயத் தோல் உரித்தோம் – பெரியார்
திடலை விட்டு ஓடிவந்தோம்..
முதல் ஆளாய்ப் பூசை வைத்து
‘ஆசிரியரை’யே முந்திக் கொண்டோம்..
‘பாப்பாத்தி கைமணமும், தமிழ் ஈழப் பத்தியமும்’
வீரவாள் கொடுப்பதற்குப் போதாதா?
தோட்டத்திலே புல்லறுக்கும்
மாவீரன் கதை கேளு..
சேலைகட்டிய பிரபாகரனைக்
கோட்டையிலே நீ பாரு..
சமச்சீராம்..கல்வியாம்..வெங்காயம்..
ராஜபக்சே நாக்கைப் பிடுங்கிச் சாக அம்மா ஆணையிட்டார்..
‘உலகத் தமிழினமே பாராட்டி’ மயங்குகையில்,
உருப்படாத தமிழா,
ஈழத் தாயை எதிர்க்கலாமா?
சமச்சீரை ஓரம்கட்டி நன்றாக உற்றுப்பார்
நாதியத்த ஈழத்தமிழன் நாக்கு வழிக்க
வகை செய்த தீர்மானம் பார்..
பெரியாரின் ஆசியோடு பாப்பாத்தியைக்
கும்பிட்டுக் கரைசேரு..
‘சமச்சீராய்’ காலில் விழு..
இதுதாண்டா ‘பெரியாரின் திராவிட’க் கல்வி..
கவிதைப்பித்தன்
பத்தாம் வகுப்பிற்கு பாடம் ஆரம்பிக்காமல் , ஒன்றாம் வகுப்பிற்கு பாடம் ஆரம்பித்து என்ன பயன். பாடம் ஆரம்பிக்காமல் இன்னும் இரண்டுவாரம் பள்ளிக்கூடம் போகவேண்டுமா அல்லது விடுமுறையா?
பதிலளிநீக்குஅதிருக்கட்டும்ணே,
பதிலளிநீக்குmy pnoக்கு புது பங்களா கட்டியாச்சுன்னு கேள்விபட்டெனே, எப்ப குடி போறீங்கள்வொ?
நல்லவேளை தால்ச்சா சோறு கேக்காம வுட்டிங்களே ராசா
பதிலளிநீக்குsamachir kalvinu mudivu saithu booksa kodukamal exam vaikurangalam yanna koduma sir ithuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
பதிலளிநீக்கு