அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 மார்ச், 2011

சிதம்பரம் தொகுதியில் 10 வேட்புமனுக்கள் தள்ளுபடி

சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 17 பேர் 25 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ராஷ்டிரிய ஜனதாதளம் வேட்பாளரின் மனுக்களும், 2 மனுக்கள் தாக்கல் செய்த லோக் ஜனசக்தி வேட்பாளரின் ஒரு மனுவும் உள்ளிட்ட 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான எம்.இந்துமதி, தேர்தல் பார்வையாளர் ஷாலின் மிஷ்ரா, கூடுதல் உதவித் தேர்தல் அலுவலர் ஜே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அனைத்து வேட்புமனுக்களையும் பரிசீலனை செய்தனர். அப்போது வேட்புமனுக்கள் தாக்கல் செய்த அனைவரும் பங்கேற்றனர்.

வேட்புமனு பரிசீலனையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா வேட்பாளர் பி.கோவிந்தசாமியாதவ் தாக்கல் செய்த 2 மனுக்களும், ராஷ்டிரியா ஜனதா தளம் வேட்பாளர் ஆர்.சண்முகம் மனுவும், லோக் ஜனசக்தி வேட்பாளர் ஆர்.பன்னீர் தாக்கல் செய்த 2 வேட்புமனுக்களில் ஒரு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

பாஜக வேட்பாளர் தாக்கல் செய்த 3 வேட்புமனுக்களில் 2 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சுயேச்சை வேட்பாளர் எஸ்.வினோபா தாக்கல் செய்த 2 மனுக்களில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இவையல்லாமல் சுயேச்சை வேட்பாளர்கள் எஸ்.சண்முகம், கே.கவிதா, கே.ஜெயக்குமார் ஆகியோரின் 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

தள்ளுபடி செய்யப்பட்டது போக ஏற்கப்பட்டுள்ள 12 மனுக்கள் விவரம்: இரா.பன்னீர் (லோக் ஜனசக்தி), ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் (மூமுக), ஜி.எம்.ரவிவாண்டையார் (மூமுக மாற்று வேட்பாளர்), கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கட்சி), மூசா என்கிற இப்ராம்சா (மார்க்சிஸ்ட் மாற்று வேட்பாளர்), வி.கண்ணன் (பாஜக), வி.கணபதி (பாஜக மாற்று வேட்பாளர்), கே.செல்லையா (பகுஜன் சமாஜ் கட்சி) எஸ்.வினோபா (சுயேச்சை), கே.சத்தியமூர்த்தி (சுயேச்சை), ஏ.அருள்பிரகாசம் (சுயேச்சை), சி.சங்கர் (சுயே) ஆகிய 12 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இவையல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் கூடுதலாக 2 வேட்புமனுக்களும், மூமுக வேட்பாளர் ஸ்ரீதர்வாண்டையாரின் கூடுதலாக ஒரு வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.

News: Dinamani

மகளிர் தின விழாவில் பணம் பட்டுவாடா! அதிகாரிகள் விசாரணையால் பரபரப்பு!!

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே, மகளிர் தின விழாவில் பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு மற்றும் புதுச்சேரி பலநோக்கு சமூக சேவா சங்கம் சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கடலூர், பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதாக, சிதம்பரம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அதிகாரிகள் திருநாவுக்கரசு, துரைசாமி, சந்திரகாசன், ரோசாரி ஆகியோர் விழா நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் ஒவ்வொரு அறைக்கும் சென்று சோதனை செய்தனர். பணம் மற்றும் பொருள் பட்டுவாடா எதுவும் நடக்காததால் புரளி என்பது தெரியவந்தது. இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

News & Photo : Dinamalar

திங்கள், 28 மார்ச், 2011

மூ.மு.க., வேட்பாளர் மீது பரங்கிப்பேட்டை இளைஞர் காங்.,கினர் அதிருப்தி

பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி மூ.மு.க., வேட்பாளர் மீது பரங்கிப்பேட்டை இளைஞர் காங்., கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார்.

பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள தி.மு.க., - பா.ம.க., - வி.சி., கட்சி நிர்வாகிகளை மட்டும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். காங்., கட்சி நிர்வாகிகளை சந்திக்கவில்லை.

இதனால் இளைஞர் காங்., கட்சியினர் அதிருப்தியில் தேர்தல் பணி செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து பரங்கிப்பேட்டை இளைஞர் காங்., தலைவர் செய்யது அலி அகில இந்திய பொதுச்செயலர் ராகுல் மற்றும் மாநில இளைஞர் காங்., தலைவர் யுவராஜிக்கு பேக்ஸ் அனுப்பியுள்ளார்.

Source: Dinamalar

செவ்வாய், 22 மார்ச், 2011

பரங்கிப்பேட்டையில் தி.மு.க., கூட்டணிக் கட்சி தேர்தல் அலவலகம் திறப்பு

பரங்கிப்பேட்டையில் தி.மு.க., கூட்டணி கட்சி தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நடந்தது.

பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செழியன், பா.ம.க., செயலர் முருகன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகர செயலர் பாண்டியன் வரவேற்றார். சேர்மன் முத்து பெருமாள் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

விழாவில் கவுன்சிலர் ஹாஜா கமால், தி.மு.க., காண்டீபன், உசேன், தங்கவேல், காங்., அப்துல் லத்தீப், வி.சி., எழில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலர் அலி அக்பர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Source: Dinamalar


திங்கள், 21 மார்ச், 2011

"சிட்டிங் MLA" செல்வி இராமஜெயம் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 16ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. பட்டியல் வெளியானதில் இருந்து கூட்டணி கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியால், பின்னர் அவற்றில் மாற்றம் செய்யப்பட்டது.

ஏற்கனவே அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு சில தொகுதிகள் கூட்டணி ‌கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் புதிய பட்டியலில் புவனகிரி தொகுதி MLA திருமதி இராமஜெயம் அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

புதிய பட்டியல்:

  1. ஸ்ரீரங்கம்- ஜெயலலிதா,
  2. அண்ணாநகர்- கோகுல இந்திரா,
  3. தியாகராய நகர்- வி.பி. கலைராஜன்,
  4. வாலாஜாபாத்- ப.கணேசன்,
  5. வேளச்சேரி- எம்.கே.அசோக், ‌
  6. செய்யூர் (தனி) - வி.எஸ்.ராஜி,
  7. பொன்னேரி (தனி) - பொன்ராஜா,
  8. அம்பத்தூர்- எஸ்.வேதாச்சலம்,
  9. வில்லிவாக்கம்- பிரபாகர்,
  10. ராயபுரம் - டி.ஜெயக்குமார்,
  11. மயிலாப்பூர் - ராஜலட்சுமி,
  12. சோழிங்கநல்லூர்-கே.பி.கந்தன்,
  13. ஆவடி- எஸ்.அப்துல் ரஹிம்,
  14. மாதவரம்- வி.மூர்த்தி,
  15. கொளத்தூர் -சைதை துரைசாமி,
  16. திருவொற்றியூர் - கே.குப்பன்,
  17. ஆயிரம் விளக்கு- ப.வளர்மதி,
  18. துறைமுகம்- பழ.கருப்பையா,
  19. போளூர் - எஸ்.ஜெயசுதா லட்சுமிகாந்தன்,
  20. வந்தவாசி (தனி) - செய்யாமூர் .வெ. குணசீலன்,
  21. டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் - பி.வெற்றிவேலு,
  22. திண்டிவனம்- டாக்டர் த.அரிதாஸ்,
  23. விழுப்புரம் - சி.வி.சண்முகம்,
  24. உளுந்தூர்பேட்டை-ரா.குமரகுரு.
  25. சங்கராபுரம்-ப.மோகன்,
  26. கள்ளக்குறிச்சி (தனி). ப.அழகுவேல்,
  27. ஆத்தூர் (தனி) எஸ்.மாதேஸ்வரன்,
  28. ஏற்காடு-பெருமாள்,
  29. ஓமலூர்-பல்பாக்கி ஸ்ரீகிருஷ்ணன்,
  30. சேலம் மேற்கு- ஜி.வெங்கடாச்சலம்,
  31. எடப்பாடி-பழநிச்சாமி,
  32. சங்ககிரி- விஜயலட்சுமி,
  33. சேலம் தெற்கு- எம்.கே.செல்வராஜ்.
  34. வீரபாண்டி-எஸ்.கே.‌செல்வம்,
  35. ராசிபுரம் (தனி) ப.தனபால்,
  36. நாமக்கல்-கே.பி.பி.பாஸ்கர்,
  37. ஈரோடு மேற்கு - கே.வி.ராமலிங்கம்,
  38. குமாரபாளையம்-பி.தங்கமணி,
  39. மொடக்குறிச்சி- ஆர்.எம்.கிட்டுச்சாமி.
  40. தாராபுரம் (தனி) - கே.பொன்னுசாமி,
  41. காங்கேயம்-என்.எஸ்.என்.நடராஜ்,
  42. அந்தியூர்-எஸ்.எஸ்.ரமணிதரன்,
  43. பவானி-பி.ஜி.நாராயணன்,
  44. கோபிச்செட்டிபாளையம்-கே,ஏ.செங்கோட்டையன்,
  45. உதகமண்டலம்- புத்தி சந்திரன்,
  46. மேட்டுப்பாளையம்-ஓ.கே.சின்னராஜ்,
  47. அவிநாசி (தனி)-ஏ.ஏ.கருப்பசாமி,
  48. திருப்பூர் வடக்கு- எம்.எஸ்.என்.ஆனந்தன்,
  49. பல்லடம்-கே.பி.பரமசிவம்,
  50. கவுண்டம்பாளையம்-வி.சி.ஆறுகுட்டி,
  51. கோயம்புத்தூர் வடக்கு- த.மலரவன்,
  52. தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி,
  53. சிங்காநல்லூர்- ஆர்.சின்னசாமி,
  54. கிணத்துக்கடவு-சே.தாமோதரன்,
  55. பொள்ளாச்சி-எம்.கே.முத்துக்கருப்பண்ணசாமி,
  56. உடுமலைப்பேட்டை- பொள்ளாச்சி வி ஜெயராமன்,
  57. மடத்துக்குளம்- சி.சண்முக வேலு,
  58. பழநி- கே.எஸ்.என்.வேணுகோபாலு,
  59. ஒட்டன்சத்திரம்- பி.பாலசுப்ரமணி,
  60. குளித்தலை-ஏ.பாப்பாசுந்தரம்,
  61. மணப்பாறை-ஆர்.சந்திரசேகர்,
  62. நத்தம்-ரா.விஸ்வநா‌தன்,
  63. திருச்சி மேற்கு-என்.மரியம் பிச்சை,
  64. திருச்சி கிழக்கு- ஆர்.மனோகரன்,
  65. மணச்சநல்லூர்-டி.பி.பூனாட்சி,
  66. முசிறி-என்.ஆர்.சிவபதி,
  67. வேடசந்தூர்- பழனிச்சாமி,
  68. அரவக்குறிச்சி- வி.செந்தில்நாதன்,
  69. துறையூர் (தனி) - டி.இந்திராகாந்தி,
  70. பெரம்பலூர் (தனி) - இளம்பை ரா.தமிழச்‌செல்வன்,
  71. அரியலூர்- துரை மணி‌வேல்,
  72. நெய்வேல்- எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியம்,
  73. புவனகிரி- செல்வி ராமஜெயம்,
  74. குறிஞ்சிப்பாடி- சொரத்தூர் ரா. ராஜேந்திரன்,
  75. கடலூர். எம்.சி.சம்பத்,
  76. காட்டுமன்னார்கோயில் (தனி)- என்.முருகமாறன்,
  77. சீர்காழி (தனி) ம.சக்தி,
  78. கோயம்பத்தூர் தெற்கு- சேலஞ்சர் துரை என்ற துரைசாமி,
  79. பூம்புகார்- எஸ்.பவுன்ராஜ,
  80. வேதாரண்யம்- என்.வி.காமராஜ்,
  81. மன்னார்குடி - சிவா ராஜமாணிக்கம்,
  82. திருவாரூர்- குடவாசல் எம். ராஜேந்திரன்,
  83. நன்னிலம்- ஆர்.காமராஜ்,
  84. திருவிடைமருதூர் (தனி) - டி.பாண்டியராஜன்,
  85. கும்பகோணம்- ராமநாதன்,
  86. பாபநாசம்- ர.துரைக்கண்ணு,
  87. திருவையாறு- ரத்தினசாமி,
  88. தஞ்சாவூர் - எம். ரங்கசாமி,
  89. ஒரத்தநாடு- ஆர்.வைத்திலிங்கம்,
  90. அறந்தாங்கி-மு.ராஜநாயகம்,
  91. காரைக்குடி- சோழ சித பழனிச்சாமி,
  92. விராலிமலை - சி.விஜயபாஸ்கர்,
  93. திருப்பத்தூர் - ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்,
  94. மானாமதுரை (தனி) - ம. குணசேகரன்,
  95. மேலூர்- ஆர்.சாமி,
  96. மதுரை கிழக்கு- கே.தமிழரசன்,
  97. சோழவந்தான் (தனி) - எம்.வி.கருப்பையா,
  98. மதுரை வடக்கு- ஏ.கே.போஸ்,
  99. மதுரை மேற்கு- ‌செல்லூர் ராஜூ,
  100. திருமங்கலம் - முத்துராமலலிங்கம்,
  101. ஆண்டிப்பட்டி- தங்கத்தமிழ்ச்செல்வன்,
  102. போடி நாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்,
  103. ராஜபாளையம்- கே.கோபால்சாமி,
  104. சாத்தூர்- ஆர்.பி.உதயகுமார்,
  105. சிவகாசி-கே.டி.ராஜேந்திர பாலாஜி,
  106. அருப்புக்கோட்டை- வைகை செல்வன்,
  107. பரமக்குடி (தனி) - எஸ். சுந்தர்ராஜன்,
  108. முதுகுளத்தூர் - மு.முருகன்,
  109. விளாத்திகுளம்- வி.வி.மார்க்கண்‌டேயன்,
  110. தூத்துக்குடி - ஏ.பால்,
  111. திருச்செந்தூர் - பி.ஆர். மனோகரன்,
  112. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன்,
  113. கோவில்பட்டி - கடம்பூர் சே. ராஜூ,
  114. சங்கரன்கோயில் (தனி)- சொ. கருப்பசாமி,
  115. வாசுதேவநல்லூர் (தனி) - எஸ்.துரையப்பன்,
  116. கடையநல்லூர்- பி.செந்தூர் பாண்டியன்,
  117. ஆலங்குளம் - பி.ஜி. ராஜேந்திரன்,
  118. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்,
  119. அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா,
  120. கன்னியாகுமரி - கே.டி.பச்சைமால்,
  121. நாகர்கோவில்- நாஞ்சில் நா. முருகேசன்,
  122. குளச்சல் - லாரன்ஸ்,
  123. கிள்ளியூர்- ஆர்.ஜார்ஜ்,
  124. சைதாபேட்டை - ஜி.செந்தமிழன்,
  125. ஜெயங்கொண்டான்- பா.இளவழகன்,
  126. பூவிருந்தவல்லி- என்.எஸ்.ஏ. ரா.மணிமாறன்,
  127. மதுராந்தகம் (தனி) - கணிதா சம்பத்,
  128. உத்திரமேரூர் - பா.கணேசன்,
  129. காட்பாடி - அப்பு என்ற ராதாகிருஷ்ணன்,
  130. ராணிப்பேட்டை- முகமது ஜான்,
  131. வாணியம்பாடி - சம்பத் குமார்,
  132. ஆற்காடு- ஆர். ஸ்ரீநிவாசன்,
  133. வேலூர்- வி.எஸ்.விஜய்,
  134. ஜோலார்பேட்டை - சி.வீரமணி,
  135. திருப்புதூர்- ரமேஷ்,
  136. பர்கூர்- கிருஷ்ணமூர்த்தி,
  137. கிருஷ்ணகிரி- முனுசாமி,
  138. பாலக்கோடு-கே.பி.அன்பழகன்,
  139. ஊத்தங்கரை- மனோரஞ்சிதம் காமராஜ்,
  140. கலசப்பாக்கம்- அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,
  141. பாப்பிரெட்டிப்பட்டி - பழநியப்பன்,
  142. திருவண்ணாமலை- ராச்சந்திரன்,
  143. கீழ்பென்னாத்தூர்- அருங்கநாதன்,
  144. செய்யாறு- முக்கூர் சுப்ரமணியம்,
  145. மைலம்- நாகராஜன்,
  146. வானூர்- ஜானகிராமன்,
  147. பல்லாவரம்- தன்சிங்,
  148. அரக்கோணம் ( தனி) - ரவி

ஞாயிறு, 20 மார்ச், 2011

"ஸ்ரீதர்வாண்டையாரை எதிர்த்து பணியாற்றுவது திமுகவை எதிர்ப்பதாகும்'

சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையாரை எதிர்த்து அதிருப்தியாளர்கள் பணியாற்றுவது திமுக தேர்தல் சின்னத்தை எதிர்த்து வேலை செய்வதாகும் என முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேர்தல் சின்னம்தான் கட்சியின் ராஜ முத்திரை. சிதம்பரம் தொகுதியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தி, அவரை எதிர்த்து, எதிர்க்கட்சி ஒரு வன்னியர் வேட்பாளரை நிறுத்தினால் திமுகவில் உள்ள வன்னியர்கள் திமுக சின்னத்துக்குத்தான் வாக்களிப்பர்.

அதே மாதிரி தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீதர் வாண்டையாரை வெற்றி பெறச் செய்வது திமுக ஆட்சியை கைப்பற்றி கருணாநிதி கரத்தை வலுப்படுத்துவதாக கருத வேண்டும்.

சிதம்பரம் தொகுதியை திமுகவில் வன்னியரை வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்பது உண்மைதான். அதனால் வன்னியர்களுக்கு வருத்தம் ஏற்படுவதும் உண்மைதான். ஆனால் திமுக, வன்னியர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. முதல் முதலாக இப்போதுதான் வன்னியருக்கு சிதம்பரம் தொகுதி கொடுக்கப்படவில்லை என செல்ல முடியாது. ஏற்கெனவே பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த பொன்.சொக்கலிங்கத்துக்கு 2 தடவை திமுகவில் சீட் கொடுக்கப்பட்டு ஒரு முறை வெற்றியும் பெற்றுள்ளார்.

கட்சி கட்டுபாடுதான் முக்கியம். ஸ்ரீதர் வாண்டையாருக்கு, சிதம்பரம் தொகுதியை ஒதுக்குவது என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது என்றால் மூமுகவுக்கும், திமுகவுக்கும் ஏற்பட்ட அரசியல் ஒப்பந்தமாகும்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீதர் வாண்டையாரை உறுப்பினரல்லாத திமுககாரராக திமுகவினர் ஏற்று பணியாற்ற வேண்டும் என வி.வி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
Source: Dinamani

சிதம்பரம் தொகுதியில் போட்டியிட லோக் ஜனசக்தி வேட்பாளர் மனு தாக்கல்

சட்டசபை தேர்தல் வேட்பு மனு தாக்கல் முதல் நாளான நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் தொகுதிகளுக்கு அந்தந்த ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும், நெய்வேலி தொகுதிக்கு நெய்வேலியில் உள்ள நில எடுப்பு துணை கலெக்டர் அலுவலகத்திலும், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி (தனி), புவனகிரி, காட்டு மன்னார் கோவில் (தனி) தொகுதிகளுக்கு கடலூரில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வேட்பு மனுத் தாக்கலுக்கான ஏற்பாடுகளை கலெக்டர் சீத்தாராமன் ஆய்வு செய்தார். கலெக்டர் அலுவலகத்தினுள் எந்த வாகனத்தையும் அனுமதிக்கக் கூடாது. வேட்பாளரை சேர்த்து ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

முதல் நாளான நேற்று மதியம் 2 மணி வரை வேட்பாளர் எவரும் வரவில்லை. பகல் 2.30 மணிக்கு சிதம்பரம் தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் வேட்பாளர் பன்னீர் தனது கட்சியினருடன் தொகுதி தேர்தல் அலுவலரான சிதம்பரம் ஆர்.டி.ஓ., இந்துமதியிடம் மனு தாக்கல் செய்தார். மற்ற தொகுதிகளில் எவரும் மனு தாக்கல் செய்யவில்லை.

Source: Dinamalar - Photo: Dinakaran


செவ்வாய், 15 மார்ச், 2011

சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் கடும் அதிருப்தியில் விவசாயிகள்

சிதம்பரம், மார்ச் 13: முழுமையான வெள்ள நிவாரணம், பயிர் காப்பீடு வழங்கப்படாதததால் ஆளும் திமுக அரசின் மீது சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 2010 கடைசியில் பெய்த கன மழையினால், வீராணம் ஏரி மற்றும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து கூடுதல் நீர் திறந்து விடப்பட்டதாலும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதியில் வெள்ளப் பெருக்கெடுத்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது.

சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் 5 தினங்களுக்கு மேலாக நீர் சூழ்ந்து இயல்பு நிலை பாதித்தது. அப்போது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனடி நிவாரணமான உணவு மற்றும் அரிசி சரியாக வழங்கப்படவில்லை.

ஆள் பற்றாக்குறை, இடுபொருள்களின் விலையேற்றம், உரத் தட்டுபாடு, நெல்லுக்கு போதிய விலை இல்லாததது இவைகளை மீறி விவசாயிகள் சம்பா சாகுபடி பயிரிட்டனர். இந்நிலையில் கன மழையினால் வெள்ளப் பெருக்கெடுத்து பயிர்கள் மூழ்கி மேலும் சேதத்தை ஏற்படுத்தியது.

வெள்ள நீர் வடிந்த பிறகு எப்போதும் போல் மத்தியக் குழுவினர் வந்து வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு சென்றனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை.

விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும் என கோரினர். ஆனால் அரசு ஹெக்டேருக்கு ரூ.8ஆயிரம் என அறிவித்தது. அந்த தொகையும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 50 சதவீதம்தான், உதாரணமாக ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் என நிவாரணம் வழங்கப்பட்டதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

முழுமையாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழுமையான நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு குடிசைகளுக்கு தலா ரூ.1500 வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் வெள்ள நீர் புகுந்த குறிப்பிட்ட குடிசைகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படாததால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தினந்தோறும் வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்களால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவதும், போலீஸார் அவர்களை சமரசப்படுத்துவதுமாக அப்பிரச்னை முடிவுற்றது.

ஆனால் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை. 2005-ம் ஆண்டு வெள்ளத்தின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1500 நிவாரணம் வழங்கியுள்ளது. தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் போதிய நிவாரணம் வழங்கப்படாததால் பொதுமக்களும், விவசாயிகளும் ஆளும் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அதேபோல் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை சரியாக வழங்கப்படவில்லை. இந்த அதிருப்தி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியினருக்கு எதிராக திரும்பும் என தமிழக உழவர் முன்னணி அமைப்பாளர் மா.கோ.தேவராசன் தெரிவித்தார்.
Source: Dinamani

சென்னையில் சிதம்பரம் தொகுதி நிர்வாகிகள் அடம்

பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதியில் உள்ள தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் சீட்டு பெற்றுக் கொண்டுதான் வருவோம் என சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., நேரடி போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க., 31 பேர் நேர்காணலுக்கு சென்றனர். யாருக்கு சீட்டு என்பது முதல்வர் அறிவிப்பார் என துணை முதல்வர் ஸ்டாலின் கூறியதால் முக்கிய நிர்வாகிகளை தவிர மற்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர்.

கடந்த மூன்று நாட்களாக முக்கிய நிர்வாகிகள் சிலர் சீட்டை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதற்காக சென்னையிலேயே முகாமிட்டு தங்களது ஆதரவு தலைவர்கள் மூலம் காய் நகர்த்தி வருகின்றனர்.

அ.தி.மு.க.,வில் சிட்டிங் எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சீட்டு கேட்டு மனு கொடுத்துள்ளனர். எந்த நேரத்திலும் ஜெயலலிதா தங்களை அழைப்பார் என்ற நம்பிக்கையில் இவர்களும் சென்னையிலேயே முகாமிட்டுள்ளனர்.

தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் சென்னையிலேயே முகாமிட்டுள்ளதால் சிதம்பரம் அரசியல் பரபரப்பு இல்லாமல் உள்ளது.
Source: Dinamalar

நேர்க்காணலுக்காக சென்னையில் காத்துக் கிடக்கும் சிதம்பரம் தொகுதி நிர்வாகிகள்

சிதம்பரம் : தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல், கூட்டணி அமைத்தல், சீட் பங்கீடு, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் சென்னையில் முகாமிட்டு தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

எப்படியும் சீட் பெற்றுவிட வேண்டும் என்ற முடிவோடு தி.மு.க., அ.தி.மு.க., காங்., தே.மு.தி.க., பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டு காலை, மாலை என இரு வேளையும் தங்கள் ஆதரவு தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களில் ஆஜராகி கும்பிடு போட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க., கூட்டணி இதுவரை மவுனம் காத்துவரும் நிலையில், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் எந்த நேரத்திலும் நாம் அழைக்கப்படலாம் என்ற நப்பாசையில் கீழ்மட்ட நிர்வாகிகள் முதல் சென்னையிலேயே முகாமிட்டு நகரை சுற்றி பார்த்து ரசித்து வருகின்றனர்.

தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியினர் தமிழகம் முழுவதும் இருந்து சென்னையில் குழுமியிருந்ததால் சென்னையே பரபரப்பாக இருந்து வந்தது. தொகுதி பக்கம் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் பார்ப்பதே அரிதாக உள்ளது.

தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., நேர்க்காணல் முடிந்து அக்கட்சிகளின் கட்டளையால் சென்னை முகாமை முடித்துக்கொண்டு அவரவர் தொகுதிக்கு திரும்பியுள்ளனர்.
Source: Dinamalar

ஞாயிறு, 13 மார்ச், 2011

சிதம்பரம் தொகுதியை ஒதுக்க கோரிக்கை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்

பரங்கிப்பேட்டை : தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதியை கேட்டு பெற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் அமானுல்லா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் சுக்கூர், மாவட்ட ஆலோசகர் கப்பார் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் அப்துல் கப்பார்கான் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாநில பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷீதுஜான் பேசினார்.

கூட்டத்தில், தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்று குறையாமல் போட்டியிட வேண்டும். வெற்றி வாய்ப்புள்ள சிதம்பரம் தொகுதியை கேட்டு பெற வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Source: Dinamalar

சிதம்பரம் தொகுதி தி.மு.க.,வில் ஆதரவாளர்களுக்காக 50 பேர் மனு

பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி தி.மு.க.,வில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் மனு கொடுத்துள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதியை தி.மு.க.,விற்கு ஒதுக்க வேண்டும் என முக்கிய நிர்வாகிகள் கட்சி தலைமையிடம் கேட்டு வருகின்றனர்.

தி.மு.க., சார்பில் போட்டியிட ஒன்றியக்குழு தலைவர்கள் செந்தில் குமார், முத்து பெருமாள், மாமல்லன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் உட்பட 31 பேர் சீட்டு கேட்டு விருப்பமனு கொடுத்துள்ளனர்.

அதில் செந்தில் குமார், முத்து பெருமாள், மாமல்லன், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணனுக்கு என ஒவ்வொருவருக்கும் 10க்கும் மேற்பட்டோர் பரிந்துரை செய்து கட்சி தலைமையில் மனு கொடுத்துள்ளனர்.

Source: Dinamalar

ஐக்கிய ஜனதா தளம் நிர்வாகிகள் சிதம்பரம் உட்பட 9 தொகுதிகளில் விருப்ப மனு தாக்கல்

நெய்வேலி: கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஐக்கிய ஜனதாதள மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நெய்வேலி இந்திரா நகரில் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பொதுச்செயலர் திருவாசகமூர்த்தி, துணைத் தலைவர் சரவணன், பொருளாளர் ராஜேந்திரன், செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கரன், சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. அதன்படி கடலூர் தொகுதிக்கு பாஸ்கரன், பண்ருட்டி சரவணன், நெய்வேலி சங்கர், குறிஞ்சிப்பாடி திருவரசமூர்த்தி, புவனகிரி மணிமாறன், சிதம்பரம் இப்ராம்பால், காட்டுமன்னார்குடி (தனி) சின்னையன், திட்டக்குடி (தனி) ராஜேந்திரன், விருத்தாசலம் தொகுதிக்கு பன்னீர்செல்வம் ஆகியோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

இவர்களது மனுக்கள் மாநிலத் தலைவர் ராஜசேகரன் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Source: Dinamalar

சிதம்பரம் எங்களுக்குத்தான்: காங்., நிர்வாகிகள் நம்பிக்கை

சிதம்பரம் சட்டசபை தொகுதியை காங்., பெற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 1951, 57, 62, 67 மற்றும் 1991ம் ஆண்டு தேர்தலில் காங்., சிதம்பரம் தொகுதியை தக்க வைத்திருந்தது. 96ம் ஆண்டு நடந்த தேர்தலில் த.மா.கா., வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்று வந்தனர்.

2011ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியை தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்., கட்சியினர் பெற தீவிர முயற்சி மேற்கொண்டு கடந்த மாதம் முதல் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டனர். தற்போது சிதம்பரம் மற்றும் வாசன் ஆதரவாளர்கள் சிதம்பரம் தொகுதியை பெற மீண்டும் தீவிர முயற்சியில் உள்ளனர்.

Source: Dinamalar

வெள்ளி, 11 மார்ச், 2011

காங்கிரஸ்ஸுக்கு விருத்தாசலம்,திட்டக்குடி



தி.மு.க. கூட்டனியில் காங்கிரஸ் இடம்பெற்ற நிலையில் ஐவர் குழு அறிவாலயத்தில் தொகுதி பங்கிடு பற்றி தி.மு.க.தேர்தல் குழுவினர்களுடன் இன்று நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகள் கிடைக்ககூடும் என நமது செய்தியாளர் தெரிவிக்கிறார்,
எனினும் திண்டிவனம் செய்யாறு தொகுதிகள் மற்றும் பிற தொகுதிகளுக்காக மீண்டும் பேச்சுவார்த்தை நடைப்பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்



அறிவாலயத்திலிருந்து, ஹம்துன் அப்பாஸ்

திங்கள், 18 மே, 2009

சிதம்பரம் லோக்சபா தொகுதியில் 8,66, 983 ஓட்டுகள் எண்ணப்பட்டன

சிதம்பரம் லோக்சபா தொகுதியில் 8 லட்சத்து 66 ஆயிரத்து 983 ஓட்டுகள் எண்ணப்பட்டன.

சிதம்பரம் லோக்சபா தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 11 லட்சத்து 25 ஆயிரத்து 649.

தேர்தலில் பதிவான ஓட்டுகள் 8 லட்சத்து 66 ஆயிரத்து 983.

இதில் ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 30 ஆயிரத்து 368ம், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 36 ஆயிரத்து 615 ஓட்டுகளும் பதிவானது.

மொத்த சதவீதம் 76.09.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஓட்டு போட்டவர்கள் 8 லட்சத்து 10 ஆயிரத்து 986 பேரும், பிற ஆவணங்களை காண்பித்து ஓட்டு போட்டவர்கள் 56 ஆயிரத்து 90 பேரும் அடங்குவர்.

சிதம்பரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளான குன்னத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 696 ஓட்டுகளில் 77 சதவீதம் பதிவானது.

அரியலூரில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 433 ஓட்டுகளில் 79 சதவீதம் பதிவானது.

ஜெயங்கொண்டத்தில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 67 ஓட்டுகளில் 78 சதவீதம் பதிவானது.

புவனகிரியில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 15 ஓட்டுகளில் 78 சதவீதம் பதிவானது.

சிதம்பரத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 96 ஓட்டுகளில்73 சதவீதம் பதிவானது.

காட்டுமன்னார் கோவிலில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 676 ஓட்டுகளில் 76 சதவீதம் பதிவானது.

இந்த ஓட்டுகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.

சிதம்பரம் தொகுதியில் 11 வேட்பாளர்கள் டிபாசிட் இழந்தனர்

சிதம்பரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் 99 ஆயிரத்து 83 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சிதம்பரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியான விடுதலை சிறுத்தைகள் சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க., கூட்டணி சார்பில் பா.ம.க., பொன்னுசாமியும், தே.மு.தி.க., சார்பில் சபா சசிக்குமாரும் போட்டியிட்டனர்.

இதில் வி.சி., திருமாவளவனுக்கும், பா.ம.க., பொன்னுசாமிக்கும் கடும் போட்டி நிலவியது.

சிதம்பரம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 11 லட்சத்து 25 ஆயிரத்து 649 பேரில் 8 லட்சத்து 71 ஆயிரத்து 76 பேர் ஓட்டளித்தனர்.

அரியலூர் மாவட்டம் தத்தனூர் கல்லூரியில் சிதம்பரம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது.

துவக்கம் முதல் திருமாவளவன் முன்னிலை வகித்தார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் 4 லட்சத்து 28

ஆயிரத்து 804 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமி 3 லட்சத்து 29 ஆயிரத்து 721 ஓட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார்.

திருமாவளவன் தம்மை எதிர்த்து போட்டியிட்ட பொன்னுசாமியைவிட 99 ஆயிரத்து 83 ஓட்டுகள் கூடுதலாக பெற்றார்.

தே.மு.தி.க., சார்பில் சபா சசிக்குமார் 66 ஆயிரத்து 283 ஓட்டுக்கள் பெற்றார்.

பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் 5,718 ஓட்டுக்களும், ராஷ்டிரிய கிரந்திகாரி சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் செல்வகுமார் 3,140 ஓட்டுக்களும், மணிகண்டன் (சுயே) 9799, மருதமுத்து (சுயே) 8367, கவியரசன் (சுயே) 6173, சுசீலா (சுயே) 4178, தர்மலிங்கம் (சுயே) 2678, சக்திவேல் (சுயே) 1,950, செந்தமிழ் செல்வி (சுயே) 1500, கனகசபை (சுயே) 1398 ஓட்டுக்கள் பெற்றுள்ளனர்.

தபால் ஓட்டில் திருமாவளவனுக்கு 825 ஓட்டுக்களும், பொன்னுசாமிக்கு 258 ஓட்டுக்களும், சபா சசிக்குமாருக்கு 10 ஓட்டுகளும், தர்மலிங்கத்துக்கு 2 ஓட்டுகளும் கிடைத்தன.

தபால் ஓட்டில் 1376 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

இத்தொகுதியில் பா.ம.க.,வைத் தவிர தே.மு.தி.க., உள்ளிட்ட 11 வேட்பாளர்களும் டிபாசிட் இழந்தனர்.

ஞாயிறு, 10 மே, 2009

சிறுபான்மையின மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தந்தவர் கருணாநிதி! ஸ்டாலின் பேச்சு!!

சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் முதல்வர் கருணாநிதி என உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

பரங்கிப்பேட்டை ஒன்றியம் பு.முட்லூர், புதுச்சத்திரம், பெரியப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சிதம்பரம் தொகுதி தி.மு.க., கூட்டணி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து அமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:

ஏழை, எளிய மக்களுக்கு பல நல்ல திட்டங்களை இந்த அரசு செய்து வருகிறது.

முதல்வர் கருணாநிதியின் சிறப்பான ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய், திருமண உதவி தொகை 20 ஆயிரம் ரூபாய், இலவச கலர் டிவி, கேஸ் அடுப்பு என பல திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

நீண்ட காலமாக போராடி வந்த சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டை கருணாநிதி வாங்கி கொடுத்தார்.

திருமாவளவனை நமது கட்சி வேட்பாளராக கருதி அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

கூட்டத்தில் ஒன்றிய சேர்மன் முத்துப்பெருமாள், தி.மு.க., இளைஞரணி செயலாளர் திருமாறன், துணை செயலாளர் ராஜாராமன், நகர செயலாளர் பாண்டியன், பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், துணை தலைவர் செழியன், வக்கீல் தங்கவேல், பிரதிநிதி காண்டீபன், இளைஞரணி முனவர் உசேன், கோவிந்தராஜ், விவசாய அணி அர்ச்சுனன், பாலகுரு, சின்னஅஞ்சபுலி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வியாழன், 9 அக்டோபர், 2008

2 ஆண்டு சாதனை குறித்து மக்கள் மகிழ்ச்சி - பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் பெருமிதம்

பேரூராட்சி தலைவராக முஹம்மது யூனுஸ் அவர்கள் பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் மக்கள் மற்றும் அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்று உள்ளதாக பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் கூறினார் தினத்தந்தி 08.10.2008 தேதியிட்ட தொழில் மலரில் (பக்கம் 100) அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறி உள்ளார்.
(மேலும் விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள படத்தினை கிளிக் செய்து படிக்கவும்)

சனி, 9 பிப்ரவரி, 2008

பரங்கிப்பேட்டையில் தி.மு.க.வின் பொதுக்கூட்டம்.

பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. வின் சார்பில் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் சிறப்புப் பேச்சாளராக வெற்றிக்கொண்டான் உரை நிகழ்த்தினார். இதில் முத்துப்பெருமாள், பேரூராட்சி தலைவர் முஹமது யூனுஸ், பாண்டியன், முனவர் உசேன் மற்றும் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள், செயளர்கள், கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.