திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 மார்ச், 2011

பரங்கிப்பேட்டையில் தி.மு.க., கூட்டணிக் கட்சி தேர்தல் அலவலகம் திறப்பு

பரங்கிப்பேட்டையில் தி.மு.க., கூட்டணி கட்சி தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நடந்தது.

பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செழியன், பா.ம.க., செயலர் முருகன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகர செயலர் பாண்டியன் வரவேற்றார். சேர்மன் முத்து பெருமாள் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

விழாவில் கவுன்சிலர் ஹாஜா கமால், தி.மு.க., காண்டீபன், உசேன், தங்கவேல், காங்., அப்துல் லத்தீப், வி.சி., எழில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலர் அலி அக்பர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Source: Dinamalar


ஞாயிறு, 20 மார்ச், 2011

"ஸ்ரீதர்வாண்டையாரை எதிர்த்து பணியாற்றுவது திமுகவை எதிர்ப்பதாகும்'

சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையாரை எதிர்த்து அதிருப்தியாளர்கள் பணியாற்றுவது திமுக தேர்தல் சின்னத்தை எதிர்த்து வேலை செய்வதாகும் என முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேர்தல் சின்னம்தான் கட்சியின் ராஜ முத்திரை. சிதம்பரம் தொகுதியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தி, அவரை எதிர்த்து, எதிர்க்கட்சி ஒரு வன்னியர் வேட்பாளரை நிறுத்தினால் திமுகவில் உள்ள வன்னியர்கள் திமுக சின்னத்துக்குத்தான் வாக்களிப்பர்.

அதே மாதிரி தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீதர் வாண்டையாரை வெற்றி பெறச் செய்வது திமுக ஆட்சியை கைப்பற்றி கருணாநிதி கரத்தை வலுப்படுத்துவதாக கருத வேண்டும்.

சிதம்பரம் தொகுதியை திமுகவில் வன்னியரை வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்பது உண்மைதான். அதனால் வன்னியர்களுக்கு வருத்தம் ஏற்படுவதும் உண்மைதான். ஆனால் திமுக, வன்னியர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. முதல் முதலாக இப்போதுதான் வன்னியருக்கு சிதம்பரம் தொகுதி கொடுக்கப்படவில்லை என செல்ல முடியாது. ஏற்கெனவே பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த பொன்.சொக்கலிங்கத்துக்கு 2 தடவை திமுகவில் சீட் கொடுக்கப்பட்டு ஒரு முறை வெற்றியும் பெற்றுள்ளார்.

கட்சி கட்டுபாடுதான் முக்கியம். ஸ்ரீதர் வாண்டையாருக்கு, சிதம்பரம் தொகுதியை ஒதுக்குவது என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது என்றால் மூமுகவுக்கும், திமுகவுக்கும் ஏற்பட்ட அரசியல் ஒப்பந்தமாகும்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீதர் வாண்டையாரை உறுப்பினரல்லாத திமுககாரராக திமுகவினர் ஏற்று பணியாற்ற வேண்டும் என வி.வி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
Source: Dinamani

ஞாயிறு, 13 மார்ச், 2011

சிதம்பரம் தொகுதி தி.மு.க.,வில் ஆதரவாளர்களுக்காக 50 பேர் மனு

பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி தி.மு.க.,வில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் மனு கொடுத்துள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதியை தி.மு.க.,விற்கு ஒதுக்க வேண்டும் என முக்கிய நிர்வாகிகள் கட்சி தலைமையிடம் கேட்டு வருகின்றனர்.

தி.மு.க., சார்பில் போட்டியிட ஒன்றியக்குழு தலைவர்கள் செந்தில் குமார், முத்து பெருமாள், மாமல்லன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் உட்பட 31 பேர் சீட்டு கேட்டு விருப்பமனு கொடுத்துள்ளனர்.

அதில் செந்தில் குமார், முத்து பெருமாள், மாமல்லன், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணனுக்கு என ஒவ்வொருவருக்கும் 10க்கும் மேற்பட்டோர் பரிந்துரை செய்து கட்சி தலைமையில் மனு கொடுத்துள்ளனர்.

Source: Dinamalar