கடலூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாவட்டந்தோறும் நேற்று வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. கடலூரில் நேற்று நடைபெற்ற இப்போராட்டத்தில் பரங்கிப்பேட்டை, நெல்லிக்குப்பம், கடலூர் முதுநகர், லால்பேட்டை, காட்டுமன்னார்குடி, சிதம்பரம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் தவ்பீக் கண்டன உரையாற்றியபோது, 'முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையென்றால், நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு மாநில தலைநகரில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று குறிப்பிட்ட அவர், எங்களின் நிலையை முஸ்லிம் நீதிபதிகள் கூறவில்லை மாறாக அரசு நியமித்த சச்சார் கமிட்டிதான் எங்களின் மிகவும் பின்தங்கிய நிலையை எடுத்துரைக்கிறது. எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்காவிட்டால் நாங்களே எடுத்துக் கொள்வோம் என்றார்.
போராட்டத்தில் பங்கேற்ற, பரங்கிப்பேட்டை TNTJ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிலர் மருத்துவர், காவல் துறை அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவர் போன்று வேடமணிந்து இந்நிலை வேண்டும் என்றும் இறைச்சிக்கடைக்காரர், சலவை செய்பவர் போன்று வேடமணிந்து இதுதான் எங்களின் நிலையென்றும் சொல்லியிருந்தது மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது.
படங்கள்: TNTJ
ஆர்ப்பாட்டத்தின் உண்மை நிலையை அப்படியே போட்ட mypno விற்கு மிக்க நன்றி ..
பதிலளிநீக்குஇதை படிப்பவர்கள் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்து மற்றவர்கள்போல் முஸ்லிம்களும் மனைவி மக்களோடு நல்லமுறையில் வாழ துஆ செய்யுங்கள் .......... muthuraja
இம் நிலை வேண்டாம் என்ற போட்டோவில் ஐக்கிய ஜமாத்தின்
பதிலளிநீக்குபைத்துல்மால் நிர்வாகியான சகோதரர் முராத் நானா இருக்கிறார் ,,,
சமுதாய எண்ணத்தோடு கலந்துகொண்ட அவருக்கும் நன்றி ....... MUTHURAJA
"இந்நிலை வேண்டும்" என்பது நன்றாக படித்தமாணவர்கள் வேலைவாய்புக்களை இடஓதுக்கீடு மூலமே பெறமுடியும்.ஆனால் "இந்நிலை வேண்டாம்"(பேனர்)என்பது எந்தவிதத்தில் சரி எனத்தெரியவில்லை, உழைத்து சம்பாதிப்பது தவறானசெயலா...?!
பதிலளிநீக்குமீரா ஜமால் நான அவர்களுக்கு உழைத்து சம்பாதிப்பது தவறு என்றோ அந்த தொழில் தவறு என்றோ குறிப்பிடவில்லை மாறாக மற்ற சமுதாயத்தை ஒப்பிடும் போது இன்றைய முஸ்லீம்களின் நிலை இப்படி தான் இருக்கின்றது என்பதை இதன் மூலம் உணர்த்துகின்றோம்.
பதிலளிநீக்கு