திங்கள், 18 மார்ச், 2013

பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகளை வரவேற்க விடியல் விழா


பிச்சாவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விடியல் விழாவை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரத்தை சுற்றுலாத்துறையாக மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடித்தளமாக பிச்சாவரத்திற்கு வெளிநாடு, உள்நாடு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு ஏற்ப எம்.ஜிஆர். திட்டில் இயற்கை சூழலில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அமர்ந்த இயற்கை அழகை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையோ அதிகம். இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், வரவேற்கும் வகையிலும் ஆண்டுதோறும் விடியல் விழா 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல்நாள் மாலை நடக்கும் விழாவில் பல்வேறு விதமான கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை தொடர்ந்து மறுநாள் சூரியன் உதயமாவதை இயற்கை சூழலில் இருந்து கண்டு களிப்பதையே விடியல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு சுற்றுலாத்துறை சார்பில் விடியல் விழா நேற்று(சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. விழாவிற்கு கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமை தாங்கினார். சிதம்பரம் சப்-கலெக்டர் சுப்பிரமணியன் வரவேற்றார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு விழாவை தொடங்கிவைத்தார்.அப்போது அவர் பேசுகையில், ‘ எம்.ஜி.ஆர். திட்டு பகுதியை சுற்றுலா மையமாக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் கலந்து பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என தெரிவித்தார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பாலகிருஷ்ணன், செல்விராமஜெயம்,, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், கிள்ளை பேரூராட்சி தலைவர் வித்யாதித்தன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் கருத்துரை வழங்கினார். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்செல்வராஜன் நன்றி கூறினார்.

சனி, 16 மார்ச், 2013

சிங்கப்பூரில் சாலை விபத்து: கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பலி!



சிங்கப்பூரில் சாலை விபத்து: கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பலி!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று காலை நேரிட்ட சாலை விபத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார், கடலூரை சேர்ந்த கோபால் உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்தனர்.

சிங்கப்பூரில் துவாஸை நோக்கி செல்லும் விரைவுச்சாலையில் கட்டுமானப்பணியாளர்களை  பணியிடத்திற்கு அழைத்து சென்ற லாரியும், வேகமாக வந்த கார் ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேரிட்டது.  

இந்த விபத்தில் லாரியின் பின்னால் அமர்ந்திருந்த கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் (29) (உள்படம்)  உயிரிழந்தார்.  இந்த விபத்தில் கார் ஓட்டி வந்த பெண் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். இதில் கடலூரை சேர்ந்த கோபால்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்தில் உயிரிழந்த ராஜேஷ் கடந்த 8 ஆண்டு காலமாக சிங்கப்பூரில் ஜேக்லி என்ஜினியரிங் என்ற கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

புதன், 6 மார்ச், 2013

பேரூராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு விழா! ஜமாஅத்ததுல் உலமா சபை நடத்தியது!!

கடந்த வாரம் உலகத் தமிழ் பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்பறு முனைவர் பட்டம் பெற்ற பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவருமான எம்.எஸ் முஹம்மது யூனுஸ் அவர்களுக்கு சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமா பேரவையினர் பாராட்டு விழா நடத்தினர். இவ்விழாவில் ஷரிஅத் மாநாடு நடத்துவதற்கான ஆலோசனையும் நடைபெற்றது.
 
பேரவை தலைவர் மவ்லவி அப்துல் காதர் உமரி தலைமையேற்று சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலில் நடைபெற்ற இவ்விழாவில் பரங்கிப்பேட்டை மஹ்முதிய்யா அரபுக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி முஜிபுர் ரஹ்மான் கிராஅத் ஓதpனார்.  அதைத் தொடர்ந்து மவ்லவி ஸதகத்துல்லாஹ்,  மவ்லவி இஸ்மாயில் நாஜிஇ கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், கலிமா பள்ளியின் தாளாளர் இஸ்மாயில், இண்டோமால் ஜமால், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் துணைத்தலைவர் லியாகத் அலி, பொறியாளர் அப்ரா ஷாஹூல் ஹமீத், தொழிலதிபர் தவ்ஹீத், மவ்லவி அப்துஸ் ஸமது ரஷாதி, தவ்லத் நிஸா நிஸ்வான் மதரஸா நிர்வாகி ஆரிப், ஜகரிய்யா ஸாஹிப், மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செயலாளர் கமாலுத்தீன் என பலரும் யூனுஸ் அவர்களின் சேவைகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
 
இவ்விழாவில் பள்ளிவாசல் முத்தவல்லிகள், பல்வேறு ஊர் ஜமாஅத்தார்கள்இ உலமாக்கள் என சுமார் 300;ககும் மேற்பாட்டோர் கலந்து கொண்டனர். முஸ்லிம் பெண்களின் சீர்திருத்தம், அரசியல், ஊடகம்,  நீதிதுறை போன்றவற்றில் இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகளை களைவதற்கும், அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அரசாங்கத்திற்கு தங்களின் உணர்வுகளை எடுத்துரைப்பதற்கும் சிறப்பு மாநாடு நடத்துவதற்கு விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 
படங்கள்: ஷேக் ஆதம் மழாஹிரி





வெள்ளி, 1 மார்ச், 2013

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: பரங்கிப்பேட்டை தி.மு.க-வினர் கொண்டாட்டம்!

பரங்கிப்பேட்டை: தமிழக முன்னாள் துணை முதல்வரும், தி.மு.கழக மாநிலப் பொருளாளருமான மு.க.ஸ்டாலின் 60-வது பிறந்த நாள் மாநிலமெங்கும் இன்று தி.மு.க-வினரால் கொண்டாடப்பட்டு வருகின்றது.




பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, நகர செயலாளர் ஜெ.பாண்டியன் தலைமையில், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ், கடலூர் மாவட்ட தி.மு.க பிரதிநிதி ஏ.ஆர்.முனவர் உசேன், நகர இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.பைசல் யூசுப் அலி ஆகியோர் முன்னிலையில் பால் பழம், ரொட்டி ஆகியவை வழங்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை வழக்குரைஞர் அணி சார்பாக நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. வழக்கறிஞர்கள் சக்திவேல், ஜெயபால், தியாகராஜன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்
தெத்துக்கடை பகுதியில் சாதாத்கான், தி.மு.க. கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், நகர அவைத்தலைவர் தங்கவேல் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், ஒன்றிய பிரதிநிதி கோமு நகர தி.மு.க.நிர்வாகி வேலவன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.எம்.காஜா கமால், யூ.ஹபீப் ரஹ்மான், பொற்செல்வி, முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செழியன், ஜாபர் அலி, நாசர் பக்ருதீன், சரவணன், ஆறுமுகம் செட்டியார் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்துக்கொண்டனர்

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...