சிங்கப்பூரில்
சாலை விபத்து: கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பலி!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில்
நேற்று காலை நேரிட்ட சாலை விபத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்,
கடலூரை சேர்ந்த கோபால் உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்தனர்.
சிங்கப்பூரில் துவாஸை
நோக்கி செல்லும் விரைவுச்சாலையில் கட்டுமானப்பணியாளர்களை பணியிடத்திற்கு அழைத்து சென்ற லாரியும், வேகமாக
வந்த கார் ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேரிட்டது.
இந்த விபத்தில் லாரியின்
பின்னால் அமர்ந்திருந்த கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் (29) (உள்படம்) உயிரிழந்தார். இந்த விபத்தில் கார் ஓட்டி வந்த பெண் உள்பட 12 பேர்
படுகாயமடைந்தனர். இதில் கடலூரை சேர்ந்த கோபால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த
ராஜேஷ் கடந்த 8 ஆண்டு காலமாக சிங்கப்பூரில் ஜேக்லி என்ஜினியரிங் என்ற கட்டுமான நிறுவனத்தில்
பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக