திங்கள், 18 மார்ச், 2013

பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகளை வரவேற்க விடியல் விழா


பிச்சாவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விடியல் விழாவை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரத்தை சுற்றுலாத்துறையாக மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடித்தளமாக பிச்சாவரத்திற்கு வெளிநாடு, உள்நாடு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு ஏற்ப எம்.ஜிஆர். திட்டில் இயற்கை சூழலில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அமர்ந்த இயற்கை அழகை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையோ அதிகம். இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், வரவேற்கும் வகையிலும் ஆண்டுதோறும் விடியல் விழா 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல்நாள் மாலை நடக்கும் விழாவில் பல்வேறு விதமான கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை தொடர்ந்து மறுநாள் சூரியன் உதயமாவதை இயற்கை சூழலில் இருந்து கண்டு களிப்பதையே விடியல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு சுற்றுலாத்துறை சார்பில் விடியல் விழா நேற்று(சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. விழாவிற்கு கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமை தாங்கினார். சிதம்பரம் சப்-கலெக்டர் சுப்பிரமணியன் வரவேற்றார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு விழாவை தொடங்கிவைத்தார்.அப்போது அவர் பேசுகையில், ‘ எம்.ஜி.ஆர். திட்டு பகுதியை சுற்றுலா மையமாக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் கலந்து பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என தெரிவித்தார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பாலகிருஷ்ணன், செல்விராமஜெயம்,, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், கிள்ளை பேரூராட்சி தலைவர் வித்யாதித்தன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் கருத்துரை வழங்கினார். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்செல்வராஜன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...