பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பதவியேற்பு விழாவில் கேப்டன் ஹமீது அப்துல் காதர் தலைவராகவும், முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் செயல் தலைவராகவும் பதவியேற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு மீராப்பள்ளி நிர்வாகி கே. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் பதவி பிரமானம் செய்து வைத்தார்.
விழா நிறைவுக்கு பிறகு, புதிய தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ள ஜமாஅத் அலுவலகத்தை மீராப்பள்ளி நிர்வாகி கே. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜமாஅத்தின் இரு தலைவர்களும் தங்களின் இருக்கையில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக