பரங்கிப்பேட்டை : வெள்ளாற்றில் மீன் பிடிக்க சென்ற தனது மகனை காணவில்லை என தந்தை பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்குத் தெருவை சேர்ந்தவர் விஜயன், 26; இவர் கடந்த 7ம் தேதி படகில் பரங்கிப்பேட்டை வெள்ளாற்றில் மீன் பிடிக்க சென்றார். மீன் பிடிக்க சென்றவர் இதுவரை வீட்டிற்கு திரும்பிவரவில்லை. நேற்று முன்தினம் அவர் எடுத்துச்சென்ற படகு மட்டும் அன்னங்கோயில் அருகே கரை ஒதுங்கியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து விஜயனின் தந்தை சுப்ராயன் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிந்து, விஜயன் மீன் பிடிக்கும்போது எதிர்பாரதவிதமாக வெள்ளாற்றில் மூழ்கி இறந்தாரா அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது அவரை கடத்தி சென்றார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக