வெள்ளி, 26 ஜூலை, 2013

லயன்ஸ் கிளப் சார்பில் நடைப்பெற்ற இஃப்தார் விருந்து!





பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர அரிமா சங்கம் (லயன்ஸ் கிளப்) சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழச்சியை  தொடர்ந்து பரங்கிப்பேட்டை நகர அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பும் நடைப்பெற்றது.

இதில், புதிய நிர்வாகிகளாக ஏ.கே.டி. அன்சாரி தலைவராகவும் என். கனேஷ் செயலாளராகவும் ஜி. மனோகரன் பொருளாளராகவும் அறிவிக்கப்பட்டு பணியேற்றுக் கொண்டனர்.  பரங்கிப்பேட்டை அரிமா சங்கம் சார்பில் அரசு பெண்கள் பள்ளிக்கு குடி தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் வழங்கப்பட்டது. மேலும் பரங்கிபேட்டை பள்ளிகளில்  படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு  கேடயமும் ஊக்க தொகையும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற  துப்புரவு பணியாளர்களுக்கு  ஆடைகள் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...