பரங்கிப்பேட்டை: ஈகைத்திருநாள் உற்சாகத்தினை தொடர்ந்து கவுஸ் பள்ளி வட்டார இளைஞர்கள் பங்கேற்ற "பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் கவுஸ் பள்ளியில் இரவு தொழுகைக்கு பின்னர் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பெருநாளை முன்னிட்டு, வெளிநாடுகளிலிருந்து விடுப்பில் பரங்கிப்பேட்டைக்கு வருகை தந்திருக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட அப்பகுதி இளைஞர்கள் பங்கேற்றனர்.
மவ்லவி ஹெச்.அப்துஸ் ஸமத் ரஷாதி, இறைவசனம் ஓதி துவக்கி வைத்த இந்த அமர்வில் கவுஸ்பள்ளி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள், மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இரவு உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதை மிகுந்த மகிழ்ச்சியாக கருதுவதாகவும், தெரு/பகுதி மக்களிடம் நெருக்கமான நல்லுறவிற்கு இதுப்போன்ற பெருநாள் சந்திப்புகள் வழிவகுப்பதாகவும், இது தொடர வேண்டும் என்று mypno.com-செய்தியாளரிடம் பேசிய வெளிநாடு வாழ் பரங்கியர் ஒருவர் கருத்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.தவ்ஹீத், கே.அன்வர் ஹஸன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக