வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

கடந்த வார நிகழ்வு: போல் ஸ்டார் கருத்தரங்கம்..!









பரங்கிப்பேட்டை: கல்வி முன்னேற்றம் குறித்த கருத்தரங்கம் அண்மையில் பரங்கிப்பேட்டை பி.எம்.ஹபீபுல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. பரங்கிப்பேட்டை "போல் ஸ்டார்" அமைப்பு சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் வெளிநாடு வாழ் பரங்கியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இசட்.. முஹம்மது முக்தார் இறைவசனம் ஓதி கருத்தரங்கத்தினை தொடங்கி வைத்தார்.

கடந்த 20 ஆண்டுக்கால பரங்கிப்பேட்டை கல்வி நிலை குறித்த தகவல்களை தெரிவித்த பொறியாளர் கவுஸ் ஹமீது, இந்திய ஆட்சிப்பணி உள்ளிட்ட உயர்கல்வி தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை இந்த அமைப்பின் சார்பாக துவக்க நிலையிலிருந்தே வழங்க இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக கல்விக்குழு ஆர்வலரும், mypno.com ஆசிரியர்களுல் ஒருவருமான எல்.ஹமீது மரைக்காயர் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செயல் தலைவருமான முனைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாக தலைவர் கேப்டன் எம்.ஹமீது அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக