பரங்கிப்பேட்டை: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது புதுச்சத்திரம் அருகே பெத்தாங்குப்பம், கம்பளிமேடு, சிந்தாமணிக்குப்பம் ஆகிய கிராமங்களில் 17 நான்கு சக்கர வாகனங்கள், 45 மோட்டார் சைக்கிள்கள் ஆகிய வாகனங்களுடன் தமிழக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் கண்காணிப்பு அலுவலர் கலையரசி, தேர்தல் விதிமுறைகளை மீறி கூடுதல் வாகனங்களுடன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பரப்புரையில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையொட்டி இன்று காலை பரங்கிப்பேட்டை குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னிலை ஆனார். பின்னர் இவ்வழக்கு விசாரணையை 3-9-2013-க்கு ஒத்திவைத்து நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் முன்னிலை ஆவதையொட்டி, பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க.செயலாளர் முத்து பெருமாள், பேரூராட்சி மன்ற தலைவர் முனைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ், நகர தி.மு.க செயலாளர் பாண்டியன், கடலூர் மாவட்ட தி.மு.க பிரதிநிதி ஏ.ஆர்.முனவர் உசேன், சிதம்பரம் நகர செயலாளர் செந்தில் குமார், புவனகிரி ஒன்றிய தி.மு.க.செயலாளர் , வி.என்.ஜெயராமன், கிள்ளை ரவிச்சந்திரன், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், முன்னாள் துணைத்தலைவர் செழியன், கோமு, வேலவன், ஆரிபுல்லாஹ்,ஜி.எம்.கவுஸ்,மாயகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் திரண்டதால் பரங்கிப்பேட்டை நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக