இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ் பண்றிங்களா?
அதுலே கொழுப்பு இருக்கு அதனாலே இதய நோய் பிரச்சினையெல்லாம் வருதாம் சன் பிளவர் எண்ணெய் யூஸ் பண்ணுங்க அதுலே தான் கொழுப்பு இல்லை' என்று 90-களின் ஆரம்பத்தில் இப்படி ஒரு கற்பிதம் விதைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
1960 -ம் காலகட்டத்தில் தான் இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் ..
1991-ல் தொடங்கிய தாராளமயமாக்கலுக்கு பின்னரே நாட்டில் உணவு, உடை மற்றும் கலாச்சார, பாவனைகள் என்று பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டன.
சூரியகாந்தி எண்ணையை ரஷ்யா, உக்ரைன், துருக்கியில் இருந்தும், சோயா எண்ணெயை அர்ஜென்டினா, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும், மேலும் பாமாயிலைஇந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.