புதன், 22 ஏப்ரல், 2015
சிதம்பரத்தில் மாபெரும் மாநில மாநாடு; தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாடு
திங்கள், 18 மே, 2009
கோடை கால தீனிய்யாத் போட்டி
இவர்களின் நோக்கம் என்ன? இவர்களின் லட்சியங்கள் தான் என்ன?
சீரென வார்ததைகளும் மொழியத் தெரியா அந்த பிஞ்சு நெஞ்சங்களின் நாவிலிருந்து பீரிட்டு ஒளித்த லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் எனற அந்த கலிமா ஏனோ இறுகிய நெஞ்சையும் நெகிழத்தான் செய்தது.
அல்ஹம்துலில்லாஹ் எவ்வளவு அழகிய முறையில் குர்ஆனை ஓதி கான்பித்தலும், துஆ, கலிமா, ஹதீஸ், பாங்கு, பயான், கட்டுரை என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று அன்று நாயகம் (ஸல்) அவர்கள் மொழிந்த ஹதீஸுக்கு ஒப்ப அதாவது, 'கியாமத் நாள் வரை ஓர் கூட்டம் நேரிய வழியில் நிலைத்திருக்கும்' ஆம் அந்த கூட்டத்தில் உருவெடுக்கவும், உருவாக்கவும் நாங்கள் என்றுமே சளித்தவர்கள் அல்ல என்று மழலை படை மொழிந்ததை போன்று நிகழ்ச்சி அமைந்தது.
மேலதிக செய்திகளுக்கும், புகைப்படங்களுக்கும்.... http://ulamaa-pno.blogspot.com/
புதன், 22 ஏப்ரல், 2009
கோடைக்கால தீனிய்யாத் பயிலரங்கம் துவக்கம்
பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை ஏற்பாடு செய்திருக்கும் ஐந்தாம் ஆண்டு கோடைக்கால தீனிய்யாத் பயிலரங்க தொடக்க நிகழ்ச்சி பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பேரவையின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காஜா முய்னுத்தீன் மிஸ்பாஹி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆலிம்கள், நகர பெரியோர்கள், பெற்றோர்கள் மற்றும் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த பயிலரங்கத்தில் அரபு பேச்சு பயிற்சி, மார்க்கச் சட்டங்கள், தஜ்வீத் முறையில் திருக்குர்ஆன் ஓதுதல், துஆ மற்றும் ஹதீஸ் மனப்பாடம், கிராஅத் பயிற்சி, நடைமுறை ஸுன்னத்துகள், நாற்பது நபிமொழிகள் மற்றும் ஆலிம் பெருமக்களின் சொற்பொழிவுகள் என மார்க்கம் சம்பந்தமான அனைத்து கல்வியையும் சிறப்பான முறையில் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு விபரங்கள் பெற பேரவையின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம்.
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
