பாலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 அக்டோபர், 2009

சிதம்பரம் பக்கம் ஒரு ரவுண்டு


அட நம்ம புது ரயில்வே கேட்டு

நமக்கு முன்னாடி பல தலைமுறை மக்கள் பாக்காத ஆனா பாக்க ஆசைப்பட்ட ஒரு காட்சி இது .. ஆம் பிரசித்திப்பெற்ற பரங்கிபேட்டை - முட்லூர் ரோடு தான் இது கண்ணால பாத்தாலே கண்ணு வலிக்கும்ன்னு இருந்த கடமுட சாலை இன்று பளபளன்னு ஆகிடுச்சி. முட்லூர் மொடக்குலேர்ந்து ரயில்வே கேட்டுக்கு பைக்குல வெறும் ரெண்டு நிமிஷம் தான் ஆகுதுன்னா பாருங்களேன்.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் பார்த்தீங்களா என்று வசனம் பேசி பெருமையாக நிற்பது நம்ம அகரம் ரயில்வே கேட் அருகே உள்ள பாலம் தான். புரியாட்டி இத கொஞ்சம் க்ளிக்கி பாருங்க.

செவ்வாய், 21 ஜூலை, 2009

பரங்கிப்பேட்டை - சிதம்பரம் 13 கி.மீ. பயண தூரத்தில்

சிதம்பரம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தீத்தாம்பாளையம் - சி.முட்லூரை இணைக்கும் விதமாக புதிய பாலம் முடியும் கட்டி தருவாயில் உள்ளது. மிச்சமிருக்கும் இதர சில பணிகள் ஓரிரு மாதத்தில் முடிவடைந்து போக்குவரத்திற்காக திறந்து விட இருக்கும் நிலையில், பஸ் - லாரி போன்ற கனரக வாகனங்கள் தவிர்த்து இரு சக்கர வாகனங்கள், கார்-வேன் போன்றவைகள் பெரும்பாலும் பாலத்தின் பக்கவாட்டுவழியாக எளிதாக புவனகிரி செல்லாமல் சிதம்பரம் சென்றடைகின்றனர்.


மேலதிக விவரங்களுக்கு : www.mypno.com

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

மெய்ப்பட்டு வரும் கனவு

வெள்ளாற்றுக்கு குறுக்கே பாலம் சமைக்கும் பரங்கிமா நகரின் பெருமக்களின் மிக நீண்ட கால கனவு மெய்படப்போகும் காட்சி இதோ. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து கொஞ்சம் விரைவாகவே நடைபெற்று வருகின்றன பால கட்டுமான பணிகள்.
வெள்ளாற்றைமுற்றிலுமாக தடுத்து மண் பாலம் கட்டப்பட்டு அதில் ஆங்காங்கே பில்லர் எழுப்பப்பட்டு வருகிறது. நாம் நடந்தே அக்கரை வரை சென்றதை முதலில் நம்பவே முடியவில்லை. ஏராளமான வெளி மாநில வேலையாட்க்களும், பிரம்மாண்டமான இயந்திரங்களும், அவைகளின் அசத்தலான இயக்கமும் அங்கு வரும் சிறு பிள்ளைகளை விழி விரிய காண வைக்கின்றன.
நமதூர் பக்கமிருந்து தான் கட்டுமான பொருட்க்கள் வரவேண்டும் என்பதனால் அக்கரை பக்கம் முதலில் பில்லர் போடப்பட்டு வருகிறது. அவை போடப்பட்டு முடிந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நீர் போக்கு திறந்து விடப்படும். முழு கட்டுமானப்பணியும் முடிவடைய இன்னும் ஒரு வருடமாவது ஆகும் என்று அங்கு இருந்த கட்டுமான பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். ஹ்ம்ம்ம்ம் பார்க்கலாம்.

இந்த தற்காலிக மண் பாலத்தையும் அதன் மேல் வெகு மும்முரமாக இரவும் பகலும் நடைபெரும் வேலைகளையும் "பார்வையிட" திருவாளர் பரங்கிப்பேட்டை பொது ஜனம் குறிப்பாக தாய்மார்கள் தினமும் வருகை புரிவது வாடிக்கையாகிவிட்டது.
a


இப்போதும் தோணியில் வந்து இறங்கும் மக்களை காணும் போது, இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான் என்று தோன்றியது.