புதன், 4 மார்ச், 2009

கதிரவனும்..... காலைப் பனியும்...!!!


கடந்த சில நாட்களாகவே பரங்கிப்பேட்டை நகரில் கடும் வெயில் வாட்டி வதைக்கின்றது. இதன் காரணமாக பரங்கிப்பேட்டையின் சிறப்பான உணவு வகைகளில் ஒன்றான நன்னாரி சர்பத் அமோகமாக விற்பனையாகின்றது. மார்ச் மாத தொடக்கத்திலேயே நிலைமை இவ்வாறிருந்தால் கோடைக்காலம் என்றறியப்படும் ஏப்ரல்-மே மாதங்களில் நிலைமை எப்படியோ.? நம்ம அரசியல்வாதிகள் தான் பாவம், மே 13-ல் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலுக்கு வெயிலில் அலைந்து-திரிந்து மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு பெற வேண்டுமே..!


இதற்கிடையில் காலை-மாலை நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு நேரத்தில் தொடங்கும் பனி காலை 8 மணி வரை நீடித்து சாலைகளில் பனி மூட்டமாக காட்சியளிக்கின்றது, மேலும் இப்பனியின் காரணமாக குழந்தைகள் காய்ச்சலால் அவதிப்படுகின்றார்கள்.

ஹஜ் பயணம் - விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்கள், வரும் 5ம் தேதி முதல் தமிழக ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் விண்ணப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் 31.3.09

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்

தமிழக ஹஜ் கமிட்டி ,
ரோஸி டவர் (மூன்றாம் தளம்)
எண்; 13, மகாத்மா காந்தி சாலை,
நுங்கம் பாக்கம் - சென்னை.

திங்கள், 2 மார்ச், 2009

துவங்கியது +2 அரசு பொதுத்தேர்வு..


இன்று துவங்கியது பனிரெண்டாம் வகுப்பு அரசுத்தேர்வு.
பனிரென்டாம் வகுப்பிற்கான அரசு பொதுத்தேர்வு மார்ச் இரண்டாம் தினம் இன்று துவங்கியது. மாணவர்களும் மாணவியர்களும் தேர்வு மைய்யமான சேவாமந்திர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் சென்று உற்ச்சாகத்துடன் தேர்வுகளை எழுதினர்.

பத்தாம் வகுப்பு தேர்வு (S.S.L.C) இந்த மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.

தேர்வினை உற்ச்சாகத்துடன் எதிர்கொண்டு ஜெயிக்கப்போகும் மாணவர்களை அவர்களின் வாழ்வில் மென்மேலும் சாதிக்க கல்விக்குழு சார்பிலும் mypno வலைப்பூ மற்றும் mypno இணையம் சார்பிலும் வாழ்த்துக்களை பதிவு செய்து கொள்கிறோம்.