செவ்வாய், 17 மார்ச், 2009

வினோத குரங்கு?- பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு

ஆமாம், நேத்து சாயங்காலம் அவரு பார்த்தாராம், செல்போன எடுத்துட்டு வந்து போட்டோ எடுக்குறத்துகுள்ள ஓடிடிச்சாம், இவரு வூட்டு மாடிலே தான் தங்கி இருந்திச்சாம்" இப்படி மணிக்கொருதரம் மெருகூட்டப்படும் கலவையான கருத்துக்களுடன், பரங்கிப்பேட்டை பகுதி பரபரப்பின் பிடியில் ஆழ்ந்து போய் இருக்கின்றது, எல்லாம் ஒரு குரங்கு செய்த சேஷ்டை தான், அது பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.

பரங்கிப்பேட்டை தோணித்துறை பகுதியில் மனித குரங்கு (?) உலாவுவதாக பரவிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் பகலிலும், சில நேரங்களில் இரவிலும் நடமாடுகின்றது என்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்த குரங்கின், முகம், கை-கால் ஆகியவை கறுப்பு நிறத்தில் இருப்பதாக சிலர் வதந்தியை பரப்பியுள்ளதாக தினமலர் நாளேடு (15-03-2009) செய்தி வெளியிட்டுள்ளது.






...ச்சேச்சே...உங்க ஊருக்கு வந்தது (?) நான் இல்லே...







சாதரணமான குரங்குகளை விட சற்று வினோதமாக காணப்படுவதாகவும், கரடி போல் அதிகமாக முடி உள்ளதாகவும், மேலும், இந்த குரங்கு நேற்று முன்தினம் ரேவு மெயின் ரோடு, ஆற்றங்கரை தெரு போன்ற பகுதிகளிலும் சுற்றி வந்ததாகவும், தினத்தந்தி நாளேடு (16-03-2009) செய்தி வெளியிட்டுள்ளது.


குறிப்பு: மேலே இடம் பெற்றுள்ள புகைப்படம் - மாடல்


ஞாயிறு, 15 மார்ச், 2009

குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி

பரங்கிப்பேட்டையில் 2 நாட்களாக குடிநீர் வராததால் மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர். பரங்கிப்பேட்டை ஒன்றியம் பு.முட்லூரில் இருந்து பரங்கிப் பேட்டைக்கு பைப் லைன் மூலம் குடிநீர் செல்கிறது. அகரம், மெயின்ரோடு, வாத்தியாப்பள்ளி பகுதிகளில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி பரங்கிப்பேட்டை பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக பு.முட்லூரில் இருந்து குடிநீர் வராததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தற்போது வாத்தியாப்பள்ளி தெருவில் உள்ள மேல்நிலை தொட்டியில் இருந்து மட்டும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.முக்கிய இடங்களில் உள்ள அகரம் மற்றும் மெயின்ரோடு பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டியில் தண்ணீர் இல்லாததால் மக்கள் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.

நன்றி: தினமலர்

சனி, 14 மார்ச், 2009

ரோ(ஓ)டு போட்டாச்சு...!!!




தமிழ் கூறும் நல்லுலகத்தில் புதியதாக ஆராய்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட (?!)
பல சொலவடைகளில் இதுவும் பிரசித்தி பெற்ற ஒன்று தான், அது என்ன தெரியுமா?

"கோடு போட சொன்னால் போதும் ரோடே போட்டுவிடுவார்கள்" என்று.

அதன் பரிணாம வளர்ச்சி தானோ, என்னவோ தெரியவில்லை, பரங்கிப்பேட்டை காஜியார் தெருவில் ரோடு போட சொன்னால் ஓடு போடுகிறார்கள்.
மழைக்காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை முதல் படத்திலும்,
குளிர் காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை இரண்டாவது படத்திலும்
கோடை காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை மூன்றாம், நான்காம் படங்களிலும் கண்டு களியுங்கள் (?!)

இனி இளவேனிற் காலம் மட்டும் தான் பாக்கி, அந்த காலத்தில் எப்படியோ?
இப்போது-அப்போது என்று காத்திருந்து வெறுத்து போன திருவாளர் பொதுஜனம் தனது பங்காக சாலைகளில் இருக்கும் பள்ளத்தை ஓடுகளை கொண்டு நிரப்பி விட்டார். பரங்கிப்பேட்டை நகரின் பெரும்பாலான தெருக்களில் சாலைகள் போடப்பட்டிருக்கையில் இந்த காஜியார் தெரு மட்டும் தார் வாடையை நுகராமல்
இருப்பது ஏனோ ?