செவ்வாய், 28 ஏப்ரல், 2009

சிதம்பரம் (தனி) தொகுதி வேட்பாளர் இறுதி பட்டியல்

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதி வேட்பாளர் இறுதி பட்டியல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
மொத்தம் 824 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அதிக பட்சமாக, தென் சென்னை தொகுதியில் 44 பேர் போட்டியிடுகிறார்கள்.
இறுதியாக 824 பேர் போட்டி



தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில், பரிசீலனைக்குப்பின் 931 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அவற்றில் 107 பேர், தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, 40 தொகுதிகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

40 தொகுதிகளிலும் மொத்தம் 824 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர்.

அதிகபட்சமாக, தென் சென்னை தொகுதியில் 44 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் மிக குறைவாக 7 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சிதம்பரம் (தனி) - 13

1. திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)

2. பொன்னுசாமி (பா.ம.க.)

3. சபா.சசிக்குமார் (தே.மு.தி.க)

4. என்.ஆர்.ராஜேந்திரன் (பகுஜன் சமாஜ் கட்சி)

5. செல்வகுமார் (ராஷ்டிரீய கிராந்திகாரி சமாஜ்வாடி கட்சி)

6. சுசீலா (அனைத்து மக்கள் விடுதலை கட்சி)

மற்றும் 7 சுயேச்சைகள்.

திங்கள், 27 ஏப்ரல், 2009

பரங்கிப்பேட்டையில் அனுமதியின்றி பிரசாரம் செய்த டாடா சுமோ கார் பறிமுதல்

பரங்கிப்பேட்டை தேர்தல் அதிகாரி அனுமதியின்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு பிரசாரம் செய்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

பிரசாரத்திற்கு பயன்படுத்திய டாடா சுமோ கார் பறிமுதல் செய்யப்பட்டது.

சிதம்பரம் லோக்சபா தொகுதி பரங்கிப்பேட்டை பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் கட்சி சார்பில் டாடா சுமோ காரில் மைக் மூலம் பிரசாரம் செய்யப்பட்டது.

பரங்கிப்பேட்டை போலீசார் டாடா சுமோ காரை நிறுத்தி விசாரித்தபோது தேர்தல் அலுவலர் அனுமதியின்றி பிரசாரம் செய்வது தெரிய வந்தது.

அதையடுத்து மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சலீம்முதீன் (45), சுமோ டிரைவர் சதீஷ் (25) இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, பிரசாரத்திற்கு பயன்படுத்திய டாடா சுமோ காரை பறிமுதல் செய்தனர்.

கோடை கால சிறப்பு ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை

கடலூர் மாவட்டத்தில் கோடை கால சிறப்பு ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை வரும் 29ம் தேதி நடக்கிறது.

கடலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தின் கூட்டம் நடந்தது.

சங்கத் தலைவர் ராமலிங்கம், செயலாளர் சந்திரமோகன் பவுள் ராஜ், பொருளாளர் சங்கர நாராயணன்,மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், துணைத் தலைவர் கருணாகரன், பயிற்சியாளர் அமரேளதர் குமார் பிரிச்சா பங்கேற்றனர்.

  • கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் முறையாக ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி வகுப்பு துவங்க முடிவு செய்யப்பட்டது.

  • இதில் 3 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவர்.

  • பயிற்சிக்கான சேர்க்கை வரும் 29ம் தேதி முதல் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

  • ஸ்கேட்டிங் விளையாட்டினை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

Source: தினமலர்