ஞாயிறு, 7 நவம்பர், 2010

மழை துளிகள்...

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள (ஜல் புயல்) காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைபெய்துவருகிறது.

இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக்கடலிலுருந்து மத்திய மேற்குவங்க கடலை நோக்கி நகர்வதால் சென்னை அருகே இன்றிரவு கரையை கடக்கும் என எதிப்பார்க்கப்படுகின்றது...

இதன்காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது , நேற்றிரவிலிருந்து நமதூர் பரங்கிப்பேட்டையில் ஆங்காங்கே மழை பெய்ந்து வருகிறது. இதனால் கடலோரகிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்கசெல்லவில்லை.மாவட்டநிர்வாகமும்,முனெச்சரிக்கையாக ''புயல்-வெள்ள பாதுகாப்புக்காக தயார் நிலையில் தீயணைப்பு வீரர்களை வைத்துள்ளது.








ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்க்காக இன்றிரவு விமானநிலையம் செல்லயிருந்த ஹஜ் பயணிகள் புயல்-மழைக்காரணமாக முன்கூட்டியே செல்லயிருக்கிறார்கள்.

வெள்ளி, 5 நவம்பர், 2010

புதிய புயல் ஜல்....!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைபெய்துவருகிறது.

இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக்கடலிலுருந்து மத்திய மேற்குவங்க கடலை நோக்கி நகர்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு குறைந்ததோடு ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.

தற்போது வங்கக்கடலில் புதிய புயல்சின்னம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் இருந்து 1200 கிலோமீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு தினங்களுக்கு சூறைக் காற்றுடன், பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் ஆந்திராவில் நாளை முதல் கண மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த குறைந்தக்காற்றழுத்த தாழ்வு நிலைக்கு ஜல்... என்று பெயரிடப்பட்டுள்ளது

புதன், 3 நவம்பர், 2010

இந்நிலை என்று மாறும்?

மேலே உள்ள புகைப்படத்தை பார்க்கும்போது தங்களூக்கு புரிந்திருக்கும் இது ஏதோ ஒரு மருத்துவமனை என்று. ஆம் இது நீங்கள் நினைப்பதுப்போல நமது மாவட்டத்தின் தலைநகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைதான்.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளூக்கு சரிவர கவனிப்பு இல்லை என்கிற காரணத்தால் தான் தனியார் மருத்துவமனையை நோக்கி மக்கள் அதிகளவில் செல்கிறார்கள் , இவர்களின் ஓரே நோக்கம் நல்ல முறையில் நோய் குணமாகவேண்டும், எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை நோய் சரியானால் போதும் என்பதுதான்.

ஆனால் நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டிய மருத்துவமனைகளோ தங்களின் தேவையை (வேறென்ன பணத்தை தான்...) பூர்த்திசெய்வதில் தான் குறியாக உள்ளனர்.

நோயாளி படுக்கும் கட்டில் கால் உடைந்துப்போய்யிருக்கும் நிலையில், நோயாளியியை பற்றி சிறிதும் கவலைப்படாமல் , கட்டிலை மாற்றாமல்''கல்லையும்-கயிற்றையும் சேர்த்து கட்டிலை கட்டிருக்கிறார்கள்.

ஓ.....இவர்கள்தான் நோயாளியை வைத்து ''கல்லா'' கட்டுவதில் சிறந்தவர்களாயிற்றே?!

இந்நிலை என்று மாறும்?