சனி, 18 மே, 2013

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் தேர்வில் உடன்பாடு!















பரங்கிப்பேட்டை: கடந்த இரு வாரங்களாக இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரை .   தேர்வு கமிட்டி மூலம் தேர்ந்தெடுப்பதா?தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதா என நிலவி வந்த குழப்பத்திற்கு இன்று விடை காணப்பட்டது. கேப்டன் ஹமீத் அப்துல் காதர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்  தலைவராகவும்  எம்.எஸ். முஹம்மது யூனூஸ் செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் நிலவி வந்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது .
 
மற்ற நிர்வாகிகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 11 மே, 2013

கத்தார் வாழ் பரங்கிப்பேட்டை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு!



கத்தார் வாழ் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களின் அமைப்பான QATAR MUSLIM ASSOCIATION OF PORTONOVO(Q-MAP)  சிறப்புக் கூட்டம் செய்யத் ஃபத்தா வசிப்பிடத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.   முஹம்மது சிராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  புதிய நிர்வாகக் குழுஅமைக்கப்பட்டது

தலைவர்:                 .  முஹம்மது சிராஜுத்தீன்
துணைத் தலைவர்:    செல்ல மரைக்காயர்
செயலாளர்:                  ஹபீப் நூர்
துணைச் செயலாளர்காஜா நஜிமுதீன்
பொருளாளர்:                யாசர் அரஃபாத் 

கூட்டத்தில் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கானதேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. 
தேர்தலை தவிர்த்து தேர்வு கமிட்டி முலம் ஜமாஅத்தின் புதிய தலைவர் மற்றும்நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட  வேண்டும் என்றும்தேர்தல் தொடர்பானஅறிவிப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள "தேர்தல் கமிட்டியின் "முடிவுக்கு முழு ஆதரவு தெரிவித்தும்தேர்வுக் கமிட்டி எவ்வாறு அமையவேண்டும் என்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. 
இறுதியில் துணைச்செயலாளர் காஜா  நஜிமுதீன் நன்றியுரையாற்றிகூட்டத்தை நிறைவு செய்தார்

செவ்வாய், 7 மே, 2013

தேர்தல் ஆணையத்துடன் எம்.எஸ். முஹமது யூனுஸ் சந்திப்பு (படங்களுடன்)





பரங்கிப்பேட்டை: பல்வேறு பரபரப்புகளுக்கிடையே சூடு பிடித்து வரும் பரங்கிப்பேட்டை ஜமாஅத் தலைவர் தேர்தல், அறவித்தப்படி நடக்குமா என்கிற பேச்சுகளுக்கிடையில், வேட்பாளாராக களம் காண உள்ள பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு பெற்றுச் சென்றார். அப்போது, தேர்தல் குழுவினரிடம் பேசிய அவர், "ஊர் நலனுக்காகவும், சமுதாய நலனுக்காகவும் தேர்தல் குழு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஒத்துழைப்பு தருவேன்" உறுதியளித்தார்.

அப்போது, MYPNO-விடம் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் கூறுகையில், "தேர்தலை தவிர்த்து தேர்வுக் குழு முறையில் தலைவரை தேர்ந்தெடுக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள். ஊர் நலனைக் கருத்தில் கொண்டு நான் எல்லா வகையிலும் அதற்கு ஒத்துழைப்பு தர தயாரக உள்ளேன். தற்போதைய தலைவர் தேர்தல் குழுவினரை நியமித்துள்ளதால், சமுதாய நலனுக்காக அவர்கள் எடுக்கும் முடிவுக்கும் ஒத்துழைப்பு தருவேன். அதே வேளையில் தேர்தல் முறை உறுதியாகிவிட்டால் நாளை மாலை 3.30 மணியளவில் எனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்வேன்" எனக் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, தேர்தல் குழுவின் ஆலோசகர்களான ஆர்.ஹபிபுர் ரஹ்மான், எஸ்.ஏ. ரியாஸ் அஹமது, செய்யது சாகுல் ஹமீது, ஹமீது மரைக்காயர் ஆகியோர் உடனிருந்தனர்.