பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே, மனித உருவில் இறந்தே பிறந்த ஆட்டுக்குட்டியை ஏராளமானோர் பார்த்து வியந்தனர். பரங்கிப்பேட்டையை அடுத்த பு. மடுவங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜக்கண்ணு. விவசாயியான இவர் 20க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நிறைமாத சினையாக இருந்த ஆடு ஒன்று, நேற்று கடும் சிரமத்துடன் 4 குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டி உயிருடனு; 3 குட்டிகள் இறந்து; பிறந்தது. இதில் ஒன்றுக்கு மனித உருவத்தில் இறந்தே பிறந்ததை கண்ட ராஜக்கண்ணு அதிர்ச்சியடைந்தார். மனித முக வடிவில் இருந்த ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் வியப்புடனும் பரிதாப்பத்துடளும் பார்த்து சென்றனர்.. .தகவலறிந்த கால்நடை மருத்துவ ஆய்வாளர்கள் ஆட்டுக்குட்டியின் உடலை கால்நடைங் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு எடுத்து சென்றார்.
புதன், 22 மே, 2013
செவ்வாய், 21 மே, 2013
புதிய ஜமாஅத் தலைவரிடம் நிர்வாகம் ஒப்படைப்பு! புதிய நிர்வாகப் பட்டியல் விரைவில் வெளியீடு!!
பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள கேப்டன் ஹமீது அப்துல் காதர் ஜமாஅத் நிர்வாகப் பொறுப்பை முன்னால் துணைத் தலைவர் எம்.எஸ். அலி அக்பரிடமிருந்து நேற்று முறையாக பெற்றுக் கொண்டார். எம்.இ. அஷ்ரஃப் அலி, ஏ. மெஹ்ராஜ் முன்னிலையில் , ஜமாஅத் நிர்வாக கணக்கு, வங்கியிருப்பு, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டார்.
அப்போது, முன்னாள் நிர்வாகிகளான ஓ. முஹம்மது கவுஸ், கலிக்குஜ் ஜமான், ஐ. ஹபீப் முஹம்மது, அப்துல் காதிர் உமரி, சுல்தான் அப்துல் காதர், அன்ஸாரி, ஷாஜஹான், ஹனிபா, காமில் மற்றும் எம். முராது ஆகியோர் உடனிருந்தனர். புதிய தலைவர் ஜமாஅத் பொறுப்பை ஏற்றதையடுத்து புதிய நிர்வாகிகள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...




