திங்கள், 3 ஜூன், 2013

ஜமாஅத் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர் புதிய தலைவர்கள்!






பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பதவியேற்பு விழாவில் கேப்டன் ஹமீது அப்துல் காதர் தலைவராகவும், முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் செயல் தலைவராகவும் பதவியேற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு மீராப்பள்ளி நிர்வாகி கே. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

விழா நிறைவுக்கு பிறகு, புதிய தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ள ஜமாஅத் அலுவலகத்தை மீராப்பள்ளி நிர்வாகி கே. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜமாஅத்தின் இரு தலைவர்களும் தங்களின் இருக்கையில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஞாயிறு, 2 ஜூன், 2013

ஜமாஅத் தலைவர் & செயல் தலைவர் பதவியேற்பு..!
















பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய நிர்வாக பதவியேற்பு விழா மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைப்பெற்று வருகிறது. இந்த விழாவில் தலைவராக கேப்டன் ஹமீது அப்துல் காதரும், செயல் தலைவராக எம்.எஸ். முஹம்மது யூனுஸும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர். முழு தகவல்கள் இன்னும் சற்று நேரத்தில்....

படங்கள்: ஸ்மார்ட் தமீம்

சனி, 1 ஜூன், 2013

ஆலங்கட்டி மழை பரங்கிபேட்டை வந்தாச்சு! (படங்கள்)




பரங்கிபேட்டை: தமிழகம்  முழுவதும் இந்த கோடைக்காலம் வெயில்  தாங்க முடியாத அளவு இருந்த நிலையில் , கடந்த இரண்டு தினங்களாக சிறிது மேக  மூட்டத்துடனே இருந்து வந்த பரங்கிபேட்டை பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்யத்துவங்கியது. இதனிடையே,  பு.முட்லூர் , சி. முட்லூர் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சாலையில் வாகனங்களில் சென்றவர்களும் அந்த பகுதி மக்களும் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
படங்கள்: ஹசன் அலி