ஞாயிறு, 9 ஜூன், 2013

கால்பந்தாட்டப்போட்டி இன்று இறுதியாட்டம்! (படங்கள்)












பரங்கிப்பேட்டை:  பரங்கிப்பேட்டையில் நடைபெற்று வரும் மாவீரர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி நினைவு கால்பந்தாட்ட இறுதிப்போட்டி இன்று மாலை வாத்தியாப் பள்ளி திடலில் நடைபெற உள்ளது.  இன்று காலை பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி (Team A) புதுச்சேரி மற்றும் கடலூர் அணிகளுடன் விளையாடியதில் இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. அதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற ஆட்டத்தில் நாகூர் அணியுடன் புதுச்சேரி மோதியதில் 0-1 கோல் வித்தியாசத்தில் நாகூர் அணியை வீழ்த்தியது. இன்று பிற்பகல் நடைபெற உள்ள ஆட்டங்களில் புதுச்சேரி அணி கடலூர் அணியுடனும் பரங்கிப்பேட்டை அணி நாகூர் அணியுடனும் மோத உள்ளது.















படங்கள்: ஹசன் அலி
தகவல்: கிங் காலித்

சனி, 8 ஜூன், 2013

கிழக்கு மாகாணம் நல்வாழ்வுச் சங்க நிர்வாகப் பட்டியல்!


தம்மாம்: சவுதி அரேபியா கிழக்கு மாகாணம் பரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்க தேர்தலை அடுத்து நடைப்பெற்ற நிர்வாகக் கூட்டத்தில் எம். கஃபார் அலி கான் தலைமையிலான கீழ்கண்ட நிர்வாகப் பட்டியல் வெளியிடப்பட்டது.


நிர்வாகிகள் பட்டியல்

01. M. கஃபார் அலிகான் – தலைவர்

02.    B. M. T. அன்சாரி – துணைத் தலைவர்

03.    S. வஜ்ஹூத்தீன் – பொதுச் செயலாளர் & தொலை தொடர்பு (NRI)

04.  I.காஜா ஃபக்ருதீன் – துணை பொதுச் செயலாளர் & தொலை தொடர்பு (NRI)

05.  N. சாஹூல் ஹமீது – நிதி மற்றும் செயல் திட்டம்

06.  K. ஜெயுனுல்லாபுதீன் (ஜெய்லா) – ஜமாஅத் தொடர்பு

07.  M. முஹம்மது கலீல் – தகவல் தொழில் நுட்பம் & குழும மட்டுறுத்துனர்

08.  M. A. கவுஸ் மாலிமார் – பொருளாளர்

09.  A. R. முஜிபுர் ரஹ்மான் – செயலாளர்– தம்மாம் & அல்கோபார்

10.  M. அய்யுப் கான் – செயளாளர் – அப்கேக் & அல்ஹசா

11.  H. ரசீது அஹமது – செயளாளர்– ஜுபைல் & ரஸ்தனூரா


ஒருங்கிணைப்புக் குழு
01.   M.M. முஹம்மது கவுஸ்

02.   H. அலாவுதீன்

03.   I. ஜெய்னுல்லபுதீன்

04.      U. நஜீர் உபைதுல்லாஹ்

05.  S.M. ரஹமத்துல்லாஹ்

 06.     Z. கலிமுல்லாஹ்

07.    N. முஹியதீன் அப்துல் காதர்

08.   H. ஹாஜி முஹம்மது அலி


ஆலோசனை கமிட்டி

01.    M. நூர் முஹமது சதாத் கான் (பாபு கான்)

02.  A. அன்வர் சாதாத்

03.  M.Y. ஹமீது ஜாபர் சாதிக்

04.  S. தாஹா மரைக்காயர்

05.  J. தாஜுதீன்

06.  M.H. தமீமுல் அன்சாரி

07.  S. காசிம் கஜ்னவி
 தகவல்:  B. M. T. அன்சாரி – துணைத் தலைவர்

புதன், 5 ஜூன், 2013

கால்பந்தாட்ட போட்டி ஏற்பாடுகள் ஜரூர்...!

பரங்கிப்பேட்டை: மாவீரர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி நினைவு கால்பந்தாட்ட போட்டி நாளை மறுதினம் பரங்கிப்பேட்டையில் நடைபெற இருக்கின்றது. மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் இப்போட்டியில் பரங்கிப்பேட்டை, கடலூர், நெய்வேலி, புதுச்சேரி, காரைக்கால், நாகூர், பொதக்குடி, அத்திக்கடை, கூத்தாநல்லூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை கால்பந்தாட்ட போட்டி குழுவினர்கள் செய்து வருகின்றனர்.  நிறைவு நாளான வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகின்றது. இவ்விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டு பரிசுகளை வழங்கி, வாழ்த்துரையாற்றுகின்றனர்